மேலும் அந்த புடவையின் விலை என்ன? எங்கே வாங்கப்பட்டது என்று அவர்களை நச்சரிப்பது மட்டுமல்லாமல் எப்படியாவது அந்த டிசைன் புடவையை வாங்கும் வரை கணவரை தூங்க விடப் போவதில்லை.
பொதுவாக டிசைன் புடவைகள் விலை உயர்ந்தவையாக இருப்பதால் நாமே வீட்டில் டிசைன் செய்து கொள்ளலாம் என்கிறார் டிசைனர் நான்சி. அதாவது அதிகபட்சம் 500 ரூபாயில் நமக்கு தேவையான டிசைனை நம்முடைய புடவையில் உருவாக்கிக் கொள்ள முடியும்.
ஆரம்பத்தில் நகை அணிகலன் தயாரித்து விற்று வந்த நான்சி அந்த தொழில் காலத்திற்கேற்ப பயிற்சிக்கு செல்லமுடியாது என்பதால் புடவை டிசைன் செய்வதில் ஆர்வம் காட்டினார் பி.இ. பட்டதாரியான நான்சி. புடவை வியாபாரிகளிடம் புடவைகளை வாங்கிக் டிசைன் செய்து கொடுப்பது மூலம் வருமானம் பெறலாம் என்பது நான்சியின் நம்பிக்கை.
ஆரம்பத்தில் புடவை டிசைன் செய்வதிலும் ஏகப்பட்ட சறுக்கல்கள் மற்றும் அதிக அளவு சேதாரங்கள் ஆனாலும் படிப்படியாக அதன் யுக்திகளை புரிந்து கொண்டு பார்டர்களை டிசைன் வடிவமைத்து கொடுத்து வெற்றிப் படியை நோக்கி நகர்ந்தார். கடைகளில் சாதாரண புடவைகளை வாங்கி மாற்றங்கள் செய்தாலே குறைந்த விலையில் நாம் விரும்பிய புடவைகளை டிசைன் செய்து கொள்ளலாம் எனக் கூறும் நான்சி சாதாரண புடவைகள் கூட அதில் உள்ள டிசைனுக்காகத்தான் 50 ஆயிரம் ரூபாய் வரை விற்பதாக தெரிவிக்கிறார்.
புடவைகள் மெட்டீரியலால் ஆனவை. மேல் பகுதி ஒரு நிறத்திலும் கீழ் பகுதி மற்றோரு நிறத்திலும் இருக்கும். பள்ளுவில் மல்டி கலர், சில வித்தியாசமான பார்டர், 2 மெட்டீரியல் கலந்த புடவை என மொத்தம் இருப்பதே அவ்வளவு டிசைன்தான் என்கிறார் நான்சி. ஒரு புடவை உருவாக்க 6 மீட்டர் வரை துணி தேவைப்படும். ஐந்தரை மீட்டர் அகலம் கொண்ட துணிக்கு பார்டர் தைக்க வேண்டும் என்றால் 9 மீட்டர் பார்டர் துணி வேண்டும். பார்டரில் கல் அல்லது கண்ணாடி பதிப்பது உள்ளிட்ட வேலைப்பாடுகள் செய்தால் 500 ரூபாயிக்கு டிசைன் புடவை தைத்து விடலாம்.
மேலும் தலா 3 மீட்டர் 2 நிறங்கள் கொண்ட துணி வாங்கி ஒன்றாக தைத்தால் இரண்டு நிறத்திலான புடவைகள் கிடைக்கும். ஒரு புடவைக்கு 300 முதல் 1,500 ரூபாய் வரை லாபம் கிடைப்பதாக கூறுகிறார் நான்சி.
மேலும் தற்போது தொலைக்காட்சி சீரியல் நடிகைகளுக்கும் புடவைகள் டிசைன் செய்து கொடுப்பதாக கூறும் நான்சி காலத்திற்கேற்றவாறு புது புது டிசைன்களை கற்றுக் கொள்வதாக தெரிவித்தார். தற்போது மாதம் 40 ஆயிரம் ரூபாய் வரை லாபம் பார்ப்பதாகவும் விழாக்காலங்களில் மேலும் வருமானம் கூடும் எனவும் நம்பிக்கையுடன் பேசுகிறார் நான்சி.