எண்ணெய் சருமம் கொண்டவர்கள் முகப்பருவை நீக்குவதற்கான ஈசி வழிகள்

எண்ணெய் சருமம் கொண்டவர்கள் முகப்பருவை நீக்குவதற்கான ஈசி வழிகள்

சாதாரண சருமம் கொண்டவர்களில்
50 சதவீதம் பேருக்கு முகப்பரு வந்துவிடுகிறது. இதில் உலர்ந்த சருமத்தைக் கொண்டவர்கள்
நிலை பரவாயில்லை. இவர்களுக்கு பெரும்பாலும் முகப்பருக்கள் வருவதில்லை.

பொதுவாக வேப்பிலை தலைசிறந்த
கிருமி நாசினியாக செயல்படுகிறது. கொழுந்து வேப்பிலையை தண்ணீரில் அரைத்து முகப்பரு இருக்கும்
இடத்தில் பூசி 15 நிமிடம் கழித்து கழுவிவிட வேண்டும். இதனை தினமும் இரண்டு முறை செய்துவரலாம்.

முகத்திற்கு மஞ்சள் பூசுவதை
முடிந்த வரை தவிர்த்து விடுங்கள். ஏனென்றால் இப்போது வரும் மஞ்சளில் அதிக அளவு ரசாயணத்
தன்மை இருக்கிறது. அது பலரது முகத்திற்கும் ஒத்துக் கொள்ளாததாக இருக்கிறது. அதுபோல
எலுமிச்சைச் சாறையும் தனியாக முகத்தில் தேய்த்துவிட வேண்டாம்.

சந்தன பவுடரை  பன்னீரில் குழைத்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள்
கழித்து கழுவி விட வேண்டும். மூன்று மாதங்கள் தொடர்ந்து இவ்வாறு செய்து வந்தால் முகத்தில்
பருத் தொல்லையே இருக்காது.

முகப்பருவைக் கிள்ளிவிடுவது, முரண்பாடான அழகு சாதனங்களைப் பயன்படுத்துவது எலுமிச்சைப்
பழத்தை முகத்தில் அழுத்தித் தேய்ப்பது போன்றவைகளால் முகத்தை ரணமாக்கிவிடுகிறார்கள்.
அதனால் எலுமிச்சை தேய்ப்பதை தவிர்க்க வேண்டும்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்