ஆயினும் உலகில் பத்திற்கும் மேற்பட்ட நாடுகளுக்கு வீசா இல்லாமல் பயணம் செய்யலாம் என்ற ருசிகர தகவல் கிடைத்துள்ளது. இந்தோனேசியா,பூத்தான்,மாலத்தீவு ,மொரிஷியஸ், நேபாளம்,பிஜி,ஹாங்காங்,ஜமைக்கா,கென்யா,தாய்லாந்து ஆகியவை சில. மேற்கூறிய நாடுகளில் கண்களை கவரும் இயற்கை வளங்கள், சுற்றுலாத்தலங்கள் போன்றவை அதிகமாக உள்ளன.
இந்தோனேசியா:
இந்நாடு நிறைய தீவுகளை கொண்டுள்ளது.நாட்டின் தலைநகரான ” ஜகார்தா ” ஆசியாவில் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும். இந்நாடு ஆசிய விளையாட்டு போட்டியை தலைமையேற்று சிறப்பாக நடத்தியது குறிப்பிடத்தக்கது.
பூத்தான் :
உலகின் மகிழ்ச்சியான நாடாக கருதப்படும் , பூத்தானில் பௌத்தியத்தளங்கள் மிகுதியாக உள்ளன. மாலத்தீவில் 90 நாட்களுக்கு வீசவின்றி பயணம் செய்யயலாம். தேனிலவுக்கு ஏற்ற இடமாகவும் கருதப்படுகிறது.
மொரிஷியஸ் :
மொரிஷியஸ் நாட்டிலும் 90 நாட்கள் வீசவின்றி வாழலாம். தலைநகரான ” காத்மாண்டு ” எந்த நேரத்திலும் மக்கள் நடமாட்டமுடைய நகராக திகழ்கிறது.
பிஜி:
பிஜி நாட்டில் 300-க்கு மேற்பட்ட தீவுகள் உள்ளன.ஆங்கிலேயர் காலத்தின் கட்டுமானப்பணியை கண்டுக்களிக்கலாம்.
ஹாங்காங்:
இந்நாட்டிலுள்ள “டிஸ்னிலேண்டும், லாந்தொயூ தீவும் காணக்கண்கோடி தேவை.
ஜமைக்கா:
சாகசங்கள் செய்வதற்கு தயாராகயிருந்தால் ஜமைக்கா நாட்டிற்கு சென்றேத்தீர வேண்டும்.அங்குள்ள “டன்ஸ் நதியின்” மேலுள்ள வீழ்ச்சியை கடந்து தங்களின் சாகசத்திறமையை வெளிப்படுத்தலாம்.
நேபாளம்:
இமாலய மலையின் அழகை காண்பதற்கு நாம் நேபாளம் செல்ல வேண்டும். இந்துத்திருத்தலமான ” பசுபதிநாத் ஆலயம் ” , UNESCO-வின் கலாச்சார அடையாளமான பௌத்தநாத் ஆலயம் ஆகியவை நேபாளத்திற்கு மேலும் அழகு சேர்க்கின்றது.
எனவே, ஒரு சர்வதேச பயணத்தைத் திட்டமிடுவது எப்போதுமே ஒரு மன அழுத்தமாக இருக்க வேண்டும் அல்லது உங்கள் விசாவைப் பெறுவதற்கான நீண்ட செயல்முறையை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை .