குழந்தை வளரவில்லையே என்ற கவலையா? சூப்பர் மருத்துவ டிப்ஸ்!

குழந்தை வளரவில்லையே என்ற கவலையா? சூப்பர் மருத்துவ டிப்ஸ்!

உயரம் பாரம்பரியத்தினால் தீர்மானிக்கப்படுகிறது. அதாவது, தந்தையை போன்ற உயரத்தை ஆண் பிள்ளைகளும், தாயை போன்ற உயரத்தை பெண் பிள்ளைகளும் அடைகிறார்கள். மரபணுக்களால் ஒருவரின் உயரம் தீர்மானிக்கப்பட்டாலும் நம் முயற்சிகளின் மூலமும் குழந்தைகளின் உயரத்தை அதிகப்படுத்தலாம். குழந்தைகள் உயரமாக வளர என்ன செய்ய வேண்டும்? என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

குழந்தைகள் ஒரே இடத்தில் அமர்ந்து விளையாடுவதை தவிர்க்க வேண்டும். ஓடி, ஆடி விளையாடும் விளையாட்டுக்களில் அவர்களை அதிகமாக ஈடுபடச் செய்ய வேண்டும். இதனால் வயதுக்கேற்ற உயரம் அவர்களுக்கு கிடைக்கும். கூடைப்பந்து, கைப்பந்து, கால் பந்து, கிரிக்கெட், டென்னிஸ், நடனம், நீச்சல் போன்றவற்றை விளையாடச் செய்யலாம்.

தூங்கும்போது, திசுக்கள் புதுப்பிக்கப்படுகிறது. அதோடு, உடலும் சீராக வளர்ச்சியடையும். எனவே உயரமாக வளர, உடலுக்கு போதிய ஓய்வு தேவைப்படுகிறது. முடிந்த அளவு தலையணை பயன்படுத்தாமல் தூங்குவது நல்லது. அதேபோல கால் மூட்டுகளின் பின்புறம் தலையணை வைத்து தூங்கலாம். இதனால் முதுகு மற்றும் முதுகு தண்டு பலப்படும்.

யோகாவிலேயே உயரத்தை அதிகரிப்பதற்கான சில பிரத்யேக பயிற்சிகள் உள்ளன. இதை சிறு வயதிலேயே கற்றுக்கொண்டு, பயிற்சி செய்வதன் மூலம் குழந்தைகள் உயரமாக வளர உதவுகிறது.

ஒருவரின் எலும்பு வலுவில்லாமல் இருந்தாலும், அவரின் உயரம் போதுமான அளவுக்கு இருக்காது. எலும்புகள் வலுப்படும்போதுதான் உயரம் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்படும். எலும்புகள் வலிமையாவதற்கு கால்சியம் தேவைப்படுகிறது. பால்பொருட்கள், முட்டை, மீன், காளான், பச்சை நிறக் காய்கறிகளில் கால்சியம் சத்துக்கள் அதிகமாக உள்ளன.

சிறு வயதிலேயே குழந்தைகளை வெயிலில் விளையாடுவதை வழக்கமாக்கி கொண்டால் அவர்களுக்கு வைட்டமின் னு எளிதாகக் கிடைக்கும். தினமும் அதிகளவு தண்ணீர் அருந்த வேண்டும். இதனால் உடலின் வளர்ச்சிதை மாற்றம் அதிகரிக்கும் நச்சுக்கள் உடலில் இருந்து வெளியேறி, எலும்புகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். இதனால் உயரத்தை அதிகரிக்க முடியும்.

தானியங்களை அப்படியே சாப்பிடுவதை காட்டிலும், முளைக்கட்டிய தானியங்களாக சாப்பிடுவது உடல் வளர்ச்சியை அதிகரிக்க உதவுகிறது. இதனால் உயரத்தையும் அதிகரிக்க முடியும்.

ஸ்கிப்பிங் பயிற்சி செய்வது என்பது உயரத்தை அதிகரிக்க உதவும் ஒரு மிகச்சிறந்த வழியாகும். உயரமான கம்பியை பிடித்துக்கொண்டு தொங்கும் பயிற்சியானது தசைகளை வலிமையடைய செய்ய உதவுகிறது. இந்த பயிற்சியை சிறுவயது முதலே செய்து வந்தால் கண்டிப்பாக உயரத்தை அதிகரிக்க முடியும்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்