ம்யூசிக்கல்லி என்ற பெயரில் அறிமுகம் ஆகி பின்பு இது டிக் டாக் என்று பெயர் மற்றம் செய்யப்பட்டது இது பயனர்களிடையே வேகமாக பரவி வருகிறது . சீனாவைச் சேர்ந்த Bytedance நிறுவனத்திற்கு சொந்தமான இந்த செயலி அமெரிக்க சிறுவர்களிடம் அவர்களது பெற்றோர்களுக்கு தெரியாமல் சட்ட விரோதமாக பல தகவல்களை சேகரித்ததாக இதன் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இதனை விசாரித்த அமெரிக்க தலைமை ஆணையம் இந்த புகார் நிரூபிக்கப்பட்டதால் இந்நிறுவனத்திற்கு 57 லட்சம் டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.40 கோடி ஆகும். இந்நிலையில், அபராத தொகையை செலுத்துவதாக டிக்டாக் அறிவித்துள்ளது.
இந்தியாவில் மிகவும் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்ட இந்நிறுவனம் அமெரிக்காவில் மட்டும் 63 மில்லியன் பயனர்களை கொண்டுள்ளது. இது சிறுவர்களின் தனிப்பட்ட தவல்களை சேகரிக்க கூடாது எனவும் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன் காரணமாக டிக் டாக் நிறுவனம் 13 வயது சிறுவர்களுக்காக ப்ரீத்தியேகமாக தனிப்பட்ட செயலி விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.