தேங்காய் எண்ணெய் சரும தொற்றுகளை எதிர்த்து போரிடுகிறது. சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள், சரும கோடுகள், தோல் இணைப்புத் திசு வலிமைக்கு, தோலின் மேற்பரப்பில் உள்ள இறந்த செல்களை நீக்குதல் போன்ற வேலைகளை செய்கிறது.
தேங்காய் எண்ணெய் உங்களை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. இது உலர்ந்த சருமத்திற்கு போதுமான ஈரப்பதத்தை தருகிறது. இதன் ஆன்டி பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு தன்மை சரும பாதிப்புகளை சரி செய்கிறது. சரும அழகுக்கும் உங்கள் குடல் ஆரோக்கியத்திற்கும் நிறையவே தொடர்பு உள்ளது. நல்ல ப்ரஷ்ஷான காய்கறிகள் குடல் பாக்டீரியாக்களை அதிகரிக்க செய்கிறது.
வீட்டில் இருக்கும் தேங்காய் எண்ணெய்யை வைத்தே உங்கள் சருமழகை மெறுகேற்றலாம். இந்த தேங்காய் எண்ணெய்யைக் கொண்டு சருமத்திற்கு என்று நிறைய ரெசிபிகளை நாம் வீட்டிலேயே செய்து பயன் பெறலாம். பாடி ஸ்க்ரப், ஹோம்மேடு டியோடிரெண்ட், டூத் பேஸ்ட், கை மற்றும் உடல் க்ரீம், லிப் பாம் ஏன் பூச்சி விரட்டி மருந்தாக கூட தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தி கொள்ளலாம். இது இயற்கையாகவே பாதுகாப்பான ஒன்றாகவும் உள்ளது. அழகு சாதனப் பொருட்களால் சருமத்தில் ஏற்படும் நச்சுக்களை போன்ற அபாயம் இதில் இல்லை.
1/2 டீ ஸ்பூன் தேங்காய் எண்ணெய்யை உங்கள் கைகளில் எடுத்து சருமத்தை வட்ட இயக்கத்தில் நன்றாக மசாஜ் செய்யவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவி துடைத்து விடுங்கள்.
கண்களில் உள்ள கண்மை, ஐ லைனர், ஐ மேக்கப்பை கலைக்க தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தலாம். அதே நேரத்தில் எண்ணெய் கண்ணுக்குள் போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். கொஞ்சமாக எண்ணெய்யை கையில் எடுத்து கண்களில் மெதுவாக மசாஜ் செய்யுங்கள். காட்டன் பஞ்சை எடுத்து துடைத்தெடுங்கள். பிறகு வெதுவெதுப்பான நீர் கொண்டு கழுவுங்கள்.
எக்ஸிமா, சொரியாஸில் போன்ற தீவிர சரும பிரச்சினைக்கு கூட தேங்காய் எண்ணெய் பயன்படுகிறது. இதன் ஆன்டி வைரல், ஆன்டி பாக்டீரியல் தன்மை சருமத்தின் வறண்ட உலர்ந்த தன்மையை போக்கி சருமத்திற்கு மென்மையையும், ஈரப்பதத்தையும் தருகிறது.