இந்த ஒரு பூ இத்தனை நோயை குணப்படுத்துமா? எது அந்த அபூர்வ பூ என்று தெரியுமா?

இந்த ஒரு பூ இத்தனை நோயை குணப்படுத்துமா? எது அந்த அபூர்வ பூ என்று தெரியுமா?

இது ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான மூலிகையாகும். குறிப்பாக இதன் இலைகள் மற்றும் பூக்களில் பென்சோயிக் அமிலம், பிரக்டோஸ், குளுக்கோஸ், கரோட்டின், பிசின், அஸ்கார்பிக் அமிலம், மெத்தில் சாலிசிலேட், டனாட் அமிலம், ஓலியானோலிக் அமிலம் மற்றும் ஃபிளவனோல் கிளைகோசைடு போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

அதுமட்டுமின்றி இதன் மருத்துவ குணத்தால் நிறைய நன்மைகளை நமக்கு அள்ளி தருகிறது. அந்தவகையில் இதன் மருத்து குணங்கள் பற்றி இங்கு பார்ப்போம்.

இரண்டு மில்லி தேங்காய் எண்ணெய்யுடன் மற்றும் நான்கைந்து சொட்டு பாரிஜாத எண்ணெய்யை கலந்து சூடு படுத்துங்கள். இந்த வெதுவெதுப்பான எண்ணெய்யை கொண்டு பாதிக்கப்பட்ட இடத்தில் மசாஜ் செய்யுங்கள். அலற்சி குணமாகும்.

1 மில்லி ஆலிவ் ஆயில் உடன் 2 சொட்டுகள் பாரிஜாத எண்ணெய்யை கலந்து பாதங்களில் தடவுங்கள். இப்படி செய்து வந்தால் உடனே உடம்பு சூடு தணிந்து காய்ச்சல் குணமாகி விடும்.

5-6 பாரிஜாத இலைகளை நசுக்கி 2 மில்லி தேங்காய் எண்ணெய்யில் கலந்து கொள்ளுங்கள். இதை ஆர்த்ரிட்ஸ் உள்ள பகுதியில் அப்ளே செய்யுங்கள்.

20-25 பாரிஜாத இலைகளை அரைத்து 300 மில்லி லிட்டர் தண்ணீர் சேர்த்து கொள்ளுங்கள். தண்ணீர் அரைப்பங்காக வற்றும் வரை சூடுபடுத்தி அதை வடிகட்டி 3 பங்காக பிரித்து இதை காலை, மதியம் மற்றும் மாலை வேளைகளில் குடித்து வாருங்கள். சாப்பிடுவதற்கு 1 மணி நேரம் முன்பாக குடிக்க வேண்டும். இப்படியே 2 மாத காலம் குடித்து வந்தால் நன்மை உண்டாகும்.

10-15 பாரிஜாத இலைகளை போட்டு 2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடுங்கள். அதனுடன் இஞ்சி அல்லது தேன் கலந்து கொள்ளுங்கள். 5-7 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும். பிறகு வடிகட்டி இந்த தண்ணீரை குடித்து வந்தால் இருமல் நின்று விடும்.

பாரிஜாத இலைகளை போட்டு டீ தயாரித்து அதை ஒரு நாளைக்கு ஒரு முறை என பருகி வாருங்கள். மலச்சிக்கல் இனி இருக்காது. 20-25 பாரிஜாத இலைகளை அரைத்து 300 மில்லி லிட்டர் நீரில் கலந்து சூடுபடுத்துங்கள். தண்ணீர் பாதியாக வற்றிய பிறகு 3 பகுதியாக பிரித்து கொள்ளுங்கள்.

இதை காலை, மதியம் மற்றும் மாலை வேளைகளில் குடித்து வாருங்கள். சாப்பிடுவதற்கு 1 மணி நேரம் முன்பாக குடிக்க வேண்டும். இப்படியே 2 மாத காலம் குடித்து வந்தால் நோயெதிப்பு சக்தி அதிகரிக்கும்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்