இரவு நேரத்தில் பால் குடிக்கலாமா..? இரவில் சாப்பிடக்கூடாத உணவுகள் பட்டியல்!

இரவு நேரத்தில் பால் குடிக்கலாமா..? இரவில் சாப்பிடக்கூடாத உணவுகள் பட்டியல்!

முக்கியமாக எண்ணெய் உணவுகள் மற்றும் கொழுப்பு அதிகமான உணவுகளை அறவே ஒதுக்க வேண்டும். காலையிலும் மதியமும் சாப்பிட்டு விட்டு வேலை செய்வதால் அந்த உணவு விரைவில் ஜீரணமாகி விடுகிறது. ஆனால் இரவு உணவு சாப்பிட்டு விட்டு ஓய்வு எடுக்கதானே செல்கிறோம் என்று மிகக் குறைந்த அளவிலான உணவோ அல்லது சாப்பிடாமலோ தூங்கினால் உடல் எடை குறையும் என்ற கருத்து எல்லோரிடமும் இருந்து வருகிறது.

இரவு நேரத்தில் எந்த உணவுகளை சாப்பிடக்கூடாது, எதை சாப்பிடலாம் என்பதில் சிறிது குழப்பம் இருக்கும். சிலர் எடையைக் குறைப்பதற்கு இரவு நேரத்தில் சாப்பிடாமல் பட்டினி கிடப்பார்கள். ஆனால் இப்படி பட்டினி கிடப்பதால் மட்டும் உடல் எடையைக் குறைத்துவிட முடியும் என்று நினைக்காதீர்கள்.

இரவு நேரத்தில் நீங்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகள் இவை மட்டுமே.. இது ஆரோக்கியத்திற்கும் பொருந்தும்.. டயட்டில் இருப்பவர்களுக்கும் பொருந்தும். இரவு ஒன்பது மணிக்கு மேல் பால் குடிப்பதை தவிர்க்க வேண்டும். இரவில் பால் அருந்துவதால், செரிமான பிரச்சனைகள் ஏற்படும். அதனால், சீரான தூக்கம் பாதிக்கப்படுகிறது.

இரவு நேரத்தில் சரியான உணவுகளை தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும். அதுவும் புரோட்டீன் உணவுகளை உண்பது நல்லது. எனவே பருப்பு வகைகள், பச்சை காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்றவற்றை சாப்பிடலாம்.

இரவு நேரங்களில் இனிப்பான உணவுகளை ஒதுக்க வேண்டும். இரவு ஒன்று அல்லது இரண்டு வாழைப்பழம் மட்டும் சாப்பிட்டு வந்தால் உங்கள் உடல் எடையில் நல்ல மாற்றம் காணலாம். கீரையை இரவு உணவாக எடுத்து கொள்ளக்கூடாது. ஏனெனில், இரவில் கீரையை எடுத்துக்கொள்வதால் தேவைக்கு அதிகமான கலோரி கிடைக்கிறது. இதனால், செரிமானக் கோளாறு ஏற்படும்.

இறைச்சியில் அதிக அளவிலான புரோட்டீனும், கொழுப்புச்சத்தும் உள்ளன. எனவே, இதை செரிக்க அதிக நேரம் தேவைப்படும். இதனால், வாயுத்தொல்லை உருவாகும். இரவில் நு}டூல்ஸ், மேகி போன்ற துரித உணவுகளை கண்டிப்பாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

40 வயதிற்கு மேற்பட்டோர் இரவில் மட்டன் எடுத்துக்கொள்வதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். பூசணி, புடலை, சுரக்காய், பாகற்காய், கோவைக்காய், தர்பூசணி, சௌசௌ போன்ற நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளை இரவில் சாப்பிடும்போது, அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை ஏற்படும். குறிப்பாக, சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த வகை உணவுகளை இரவில் சாப்பிடக்கூடாது.

இரவில், பச்சை மிளகாய் சாப்பிட்டால் உடலின் வளர்சிதை மாற்றம் பாதிக்கப்படும். மிளகாயில் உள்ள அமினோ அமிலம் நெஞ்சு எரிச்சலை உண்டாக்கும். இதில் உள்ள புரோட்டீன் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரித்து, தூக்கமின்மையை உண்டாக்குகிறது.

இரவு நேரங்களில் காபி, டீயை தவிர்ப்பது நல்லது.

சோடாவில் அதிக அளவு சர்க்கரை மற்றும் கலோரி நிறைந்து உள்ளன. இவை நெஞ்சு எரிச்சல் மற்றும் வயிற்று உபாதைகளை உருவாக்கும். தூக்கத்தைக் குறைக்கும்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்