வெப்பச்சலனம் காரணமாக தென் தமிழகம் மற்றும் கேரளாவை ஒட்டியுள்ள பகுதிகளில் அடுத்த மூன்று நாட்களுக்கு ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல்.
வெப்பநிலையை பொறுத்த வரை வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி,தருமபுரி, சேலம்,நாமக்கல்,திருச்சி, கரூர், திண்டுக்கல் மற்றும் மதுரை,திருவள்ளுர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் அடுத்த மூன்று தினங்களுக்கு இயல்பை விட வெப்பம் 2டிகிரி முதல் 3டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்றும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் 3செ.மீ மழை பதிவாகி உள்ளது,திருநெல்வேலி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 3 தினங்களாக மிதமான மழை பதிவாகி வருகிறது.
சென்னையை பொறுத்த வரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும்,அதிகப்பட்ச வெப்பநிலையாக 36டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலையாக 28டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும்.