ஆம். மென்ஸ் ஹெல்த் மேகசின் இதுபற்றி ஒரு ஆய்வுத் தகவலை வெளியிட்டுள்ளது. அதில், அலிஸா விட்டி என்பவர், தனது ஆய்வு முடிவுகளை விரிவாக தெரிவித்துள்ளார். அதாவது, புதுமணத் தம்பதி காலை நேரத்தில் செக்ஸ் செய்வது சற்று நல்லதாக இருந்தாலும், அந்த நேரத்தில் ஆண்களால் மட்டுமே முழு எழுச்சியுடன் உறவு கொள்ள முடியும் என்று, அலிஸா விட்டி கூறுகிறார்.
இதுதவிர, பிற்பகல் 3 மணி அளவில், செக்ஸ் வைத்துக் கொள்வதுதான், ஆண் பெண், இருவருக்கும் முழு சிறப்பாக இருக்கும் என, அவர் குறிப்பிடுகிறார்.
பிற்பகலில்தான், இருவருக்கும் உடலில் உள்ள ஹார்மோன்கள் ஒத்திசைவுடன் இயங்குவதோடு, உடல் ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் இருவரும் பின்னிப் பிணைந்து, முழு திருப்தியுடன் உடல் உறவு செய்ய முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டுகிறார். அதேசமயம், ஒரு சிலருக்கு, பிற்பகலில் செக்ஸ் செய்ய நேரம் கிடைக்கவில்லை என வருத்தப்படாதீர்கள். அதை சமாளிக்க இன்னொரு வழியும் உள்ளது. காலை நேரத்தில் ஒரு காஃபி குடித்துவிட்டு, உடல் உறவு கொள்வது நல்ல திருப்தி தரும் என்றும் அலிஸா தெரிவித்துள்ளார்.
மேலும், காலை நேரத்தில் செக்ஸ் செய்வதால், உடலில் உள்ள அழுத்தம், குறைந்த ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் சரியாகி, உடல் இயல்பான நிலைக்கு வரும் என்றும் அவர் கூறுகிறார்.