அமெரிக்காவை கலக்கும் ஈழத் தமிழனின் தோசைக் கடை! விற்பனையில் பட்டையை கிளப்பும் ஐடம்கள்!

அமெரிக்காவை கலக்கும் ஈழத் தமிழனின் தோசைக் கடை! விற்பனையில் பட்டையை கிளப்பும் ஐடம்கள்!

விண்ணை முட்டும் கட்டிடங்களும், பகட்டான மனிதர்களும் நடமாடும் நியூயார்க் நகரில், பென் ரயில் நிலையம் அருகில், கிறிஸ்டோபர் தெருவில் உள்ள ஒரு சாதாரண தோசைக்கடையில் மக்கள் கூட்டம் அலைமோதுவதை நீங்கள் நேரில் சென்றால் பார்க்கலாம். வெள்ளையர்களும், தமிழர்களும் இங்கே போட்டி போட்டுக் கொண்டு தோசை சாப்பிட காத்திருப்பது ஆச்சரியமான காட்சியாக உள்ளது. 

ஆம். இப்படியான தோசைக்கடையை வைத்துள்ளவர், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பழனிச்சாமி திருக்குமார் என்பவர்தான். இலங்கையை சேர்ந்த இவர், உள்நாட்டுப் போர் காரணமாக, பிழைப்பு தேடி, நியூயார்க் வந்துள்ளார். ஆரம்பத்தில் பெட்ரோல் பங்க், வாட்ச்மேன் வேலை செய்த இவர், படிப்படியாக, கையில் காசு சேர்ந்ததும் தெருவோரத்தில் தோசைக்கடை வைக்க, அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளார். 

அதன்பின் நடந்ததை அவரே சொல்கிறார், ”தோசைக் கடை வைக்க அனுமதி கிடைத்ததும், 13,000 டாலர் முதலீட்டில், இந்த கடையை தொடங்கினேன். பிறகு, வங்கிக் கடன் வாங்கி, கடையை சற்று விரிவுபடுத்தி,  ஒருநாள் கூட விடுமுறையின்றி, கடுமையாக உழைத்தேன். பனி பெய்யும்போது கூட, என் கடையில், சுடச்சுட தோசை கிடைக்கும் என்பதால், பலதரப்பு மக்களும் காத்திருந்து வாங்கி சாப்பிடுவது வழக்கம். 18வது ஆண்டாக, வெற்றிகரமாக, கடை நடத்தி வருகிறேன்.

நியூயார்க் மக்கள் எந்நேரமும் பரபரப்பாக அலைபவர்கள் என்பதால், இங்கு என்னைப் போன்ற ஆட்கள் நடத்தும் தெருவோரக் கடைகள்தான், பிரபலம். அதுதவிர, எனது கடையில்தான் விதவிதமான வெரைட்டியில் தோசைகள் கிடைக்கின்றன. எனக்கு இப்படியான தோசை சுட எனது பாட்டிதான் கற்றுக் கொடுத்தார். சிறு வயதில் கற்றுக்கொண்டது, இப்போது நல்ல பலன் தருகிறது,” என்று, பழனிச்சாமி மகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்