காலையில் குளிப்பதை விட இரவில் குளிப்பது உங்கள் உடலில் பல அற்புத மாற்றங்களை உண்டாக்கும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இது உங்களின் தூக்கத்தின் தரத்தையும், சுகாதாரத்தையும் மட்டும் உயர்த்தாமல் உளவியல்ரீதியாகவும் உங்களுக்கு பல நன்மைகளை வழங்குகிறது.
அறிவியலின் அடிப்படையில் மிதமான வெப்பம் டென்ஷன் மற்றும் பதட்டத்தை தடுக்கும், மேலும் உடலுக்கு நல்ல நிவாரணத்தையும் வழங்கும். மேலும் இது உடல் அளவையும் தாண்டி உளவியல்ரீதியாக வும் உங்களுக்கு அமைதியை ஏற்படுத்தும். சூடான நீரில் குளிப்பது நாள் முழுவதும் செய்த வேலைக்கு மருந்தாக இருக்கும். இரவில் குளித்து விட்டு தூங்கும் போது உங்கள் தூக்கத்தின் தரம் பலமடங்கு அதிகரிக்கும்.
உங்களுக்கு பருவக்காலத்திற்கு ஏற்றார் போல அலர்ஜிகள் ஏற்பட்டால் வெளியில் நீங்கள் செல்லும்போது கிருமிகள் உங்கள் சருமம் மற்றும் உடையின் மூலம் உங்கள் இல்லத்திற்கே வரக்கூடும். இந்த சூழ்நிலையில் நீங்கள் இரவில் குளிக்காமல் தூங்கினால் உங்கள் உடலில் இருக்கும் கிருமிகள் அலர்ஜியின் தாக்கத்தை அதிகரிக்கும். மேலும் இது தூக்க பிரச்சினைகளையும் ஏற்படுத்தும்.