அடர் பச்சை நிறத்தில் இருக்கும் சுண்டைக்காயை மட்டுமே வாங்கி சமையலுக்கு பயன்படுத்த வேண்டும். இது லேசாக கசப்புத்தன்மை கொண்டது. வெளிர் நிறத்தில் இருக்கும் சுண்டைக்காயை வற்றல் செய்து உபயோகம் செய்யலாம்.
·
வயிற்றில் இருக்கும் புழுக்களை அழித்து, ஜீரணம் சம்பந்தப்பட்ட அனைத்து குறைபாடுகளையும் நீக்குகிறது.
·
தொடர்ந்து சுண்டைக்காய் வற்றலை சாப்பிட்டு வந்தால் உடல் சூட்டால் ஏற்படும் ஏப்பம், வயிறு விழுதல், வயிற்றுவலி மற்றும் வயிறு தொடர்பான நோய்கள் நீங்கும்.
·
தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் மற்றும் உடல் சோர்வு நீங்கவும் சுண்டைக்காய் உதவி செய்கிறது.
·
பசியின்மை, ருசியின்மை போன்ற குறைபாடுகளை நீக்கும் தன்மையும் சுண்டைக்காய்க்கு உண்டு.
சுண்டைக்காயை காயவைத்து இடித்து பொடியாக்கி, மோரில் போட்டு தினமும் குடித்துவர மந்தம், செரியாமை போன்ற பிரச்னைகள் முற்றிலுமாக கட்டுப்படும்.