RTO அலுவலகங்களில் வாகன ரிஜிஸ்ட்ரேசன் திடீர் நிறுத்தம்! காரணம் இது தான்!

RTO அலுவலகங்களில் வாகன ரிஜிஸ்ட்ரேசன் திடீர் நிறுத்தம்! காரணம் இது தான்!

நாடு முழுவதும் அனைத்து வாகனங்களிலும் டிஜிட்டல் நம்பர் பிளேட்டுகள் பொறுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நம்பர் பிளேட்டுகளில் பார்க்கோட் இடம் பெற்றிருக்கும் வகையில் டிஜிட்டல் மயம் ஆக்கப்பட்டு வருகிறது.

நம்பர் பிளேடில் உள்ள இந்த பார்கோடை போலீசார் தங்களுக்கான பிரத்யேக ஆப் மூலமாக ஸ்கேன் செய்து பார்த்தால் வாகன உரிமையாளர் பெயர், முகவரி, எஞ்சின் மற்றும் சேஸ் நம்பர் உள்ளிட்ட விவரங்கள் அடுத்த நொடி தெரிந்துவிடும். 

இந்த வகை நம்பர் பிளேட்டுகளை அனைத்து வாகனங்களிலும் பொருத்தும் போது திருடி ஒரே எண்ணை பல வாகனங்களுக்கு பயன்படுத்துவதை தடுக்க முடியும். மேலும் திருட்டு வாகனங்களை மீட்பது, விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பிச் செல்பவர்களை பிடிப்பது உள்ளிட்டவையும் எளிமையாகும்.

ஆனால் ஏப்ரல் 1ந் தேதி முதல் உற்பத்தி செய்யப்பட்ட டூவிலர், கார் உள்ளிட்ட வாகனங்களில் டிஜிட்டல் நம்பர் பிளேட்டுகள் பொறுத்துவது கட்டாயம். எனினும் அதற்கான விதிகளோ, வழிகாட்டும் அம்சங்களோ மத்திய அரசால் அறிவிக்கப்படவில்லை.

இதனால்  ஏப்ரல் 1ந் தேதி முதல் உற்பத்தி செய்யப்பட்ட டூவிலர் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கான பதிவு தமிழகம் முழுவதும் அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களிலும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்