கூகுளுடன் இணைந்து ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா என்ன செய்யப்போவுதுன்னு தெரியுமா?

கூகுளுடன் இணைந்து ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா என்ன செய்யப்போவுதுன்னு தெரியுமா?

உலகப்புகழ் பெற்ற கூகுள் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் புகழ்பெற்ற ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வாங்கி,  “பேஜோ” என்ற வாய்ஸ் அசிஸ்டெண்ட்டை இன்ஸ்டால்
செய்யப்போகிறார்கள்.   இந்தியாவில் இருக்கும்
அனைத்து கிளைகளிலும் இந்த வாய்ஸ் அசிஸ்டெண்ட்டை இன்ஸ்டால் செய்யப்போகிறார்களாம்.  

இதன் சிறப்பு அம்சம் என்னவென்றால், பாஸ் புக் பதிவு, காசோலை,
கடன் அட்டை (credit card) போன்ற அனைத்து வகையான வங்கித் தேவைகள் குறித்த தகவல்களை இதன் மூலம் அறிந்து
கொள்ளலாம்.  அதாவது, நம்முடைய தேவைகளை நாம்
இந்த “பேஜோ” அசிஸ்டெண்ட் வாய்ஸில் கேட்டால், அது உடனே நமக்கு ஆடியோ வாய்ஸில் பதில் சொல்லிவிடும்.   இந்தியாவில் உள்ள அனைத்து எடிம்  கிளைகளிலும் இந்த பயன்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.  இதற்கு நாம் பாங்க் நேரத்தில்தான் செல்ல வேண்டும்
என்பதில்லை.   24 மணி நேரமும் இந்த சேவை உண்டு.  எந்த நேரத்திலும் நம்முடைய தேவைகளை கேட்டுத் தெரிந்து
கொள்ளலாம். 

எடிம் கார்டு தடைபட்டாலோ அல்லது நான் எடுத்த பணம் ஏ.டி.எம்மில் இருந்து வெளியே வரவில்லை என்பது போன்று என்ன  கேள்விகள் இருந்தாலும்,  நாம் இந்த பேஜோவிடம் கேட்டு உடனடியாக தெரிந்து கொள்ளலாம்.  இந்த பேஜோ பயன்பாடு பாங்க்குடன் இணைக்கப்பட்டது.  அதனால் நம்முடைய கேள்விகள் பாங்க்கில் உடனடியாக
பதிவு செய்யப்பட்டு விடும்.

இந்த பேஜோ பயன்பாட்டை ஸ்டேட்
பாங்க் ஆப் இந்தியா முதன் முதலில் கூகுள் அசிஸ்டெண்ட்டுடன் இணைந்து செயல்பட உள்ளது. 

Related posts

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

மாரடைப்பு வந்தால் மரணம் நிகழ்ந்துவிடுமா.?