பசியுணர்வைத் தூண்டி உணர்வு நரம்புகளை வலுப்பெறச் செய்வது புளிப்புச் சுவை ஆகும். இது உணர்வு நரம்புகளை வலுப்பெறச் செய்கின்றது. இதயத்திற்கும், செரிமானத்திற்கும் மிகவும் நல்லது. ஆனால், இது அதிகமானால் பற்களில் பாதிப்பு ஏற்படும். மேலும் நெஞ்செரிச்சல், ரத்தக் கொதிப்பு, அரிப்பு போன்ற தொந்தரவுகளை உண்டாக்கும். எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய் போன்றவற்றில் புளிப்பு சுவை அதிகம் உள்ளது.
உடலுக்குப் போதை தரக்கூடியதும் புளிப்பு சுவைதான். அதனால்தான் பீர், வைன் போன்ற மது பானங்கள் புளிப்பு சுவையுடன் தயாரிக்கப்படுகின்றன. புளிக்கவைக்கும் பழைய சோறு, சுண்டக்கஞ்சி சோறாக மாறுவதும் இதனால்தான். புளிப்பு சுவையானது சில நேரங்களில் செரியாமை, பித்த அதிகரிப்பு, இரத்த கொதிப்பு, இரத்த சோகையை உண்டுபண்ணும் குணமுண்டு
எப்படியிருந்தாலும் புளிப்பு சுவை நம் உடலுக்குத் தேவையானதுதான். ஆனால் மிகமிக குறைந்த அளவு போதும். அதனை நம் உடம்பே தேடி எடுத்துக்கொள்ளும். அதாவது புளிப்பு சுவைக்கு நாக்கு ஏங்கும்போது கொஞ்சமாக ஊறுகாய், எலுமிச்சம் சாறு குடித்தால் போதும். அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு எனும்போது புளிப்பு சுவை எம்மாத்திரம்.