வாழைப்பழத்தில் கார்போஹைட்ரேட் மற்றும் ஊட்டச்சத்துக்கள் மட்டுமில்லை, குறைந்தது 100 கலோரிகளும் உள்ளன. ஆகவே உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள், வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால் நல்லது.கார்போஹைட்ரேட் மற்றும் காம்ப்ளக்ஸ் சுகர் அதிகம் உள்ள உருளைக்கிழங்கை, வேக வைத்து தினமும் சாப்பிட்டு வந்தால், உடல் எடை சீக்கிரம் அதிகரிக்கும்.
தினமும் ஏதேனும் ஒரு பழத்தை ஜூஸ் போட்டு குடித்தால், உடலுக்கு போதிய ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதோடு, உடல் எடையும் அதிகரிக்கும்.தானியங்களில் நிறைய கலோரிகள் உள்ளன. அதிலும் கோதுமையில் அதிகமாகவே உள்ளது. ஆகவே பிரட் வாங்கும் போது, கோதுமை பிரட்டை வாங்கி சாப்பிட்டால், ஆரோக்கியத்துடன் எடையும் கூடும்.
வேர்க்கடலை வெண்ணெயை கோதுமை பிரட் உடன், தடவி, தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள அதிகப்படியான 192 கலோரிகள் உடலுக்கு கிடைத்து, விரைவில் உடல் எடை அதிகரிக்கும்.