·
பிறக்கும்போது குழந்தையின் தலையில்
உள்ள தோல், உரியும் நிலையில் திட்டுத்திட்டாக இருப்பதுண்டு. மருத்துவர் தரும் களிம்பை
பூசினால் எளிதில் இந்த பிரச்னை மறைந்துவிடும்.
·
தோலில் வெள்ளை அல்லது சிவப்பு நிறத்தில்
கொப்புளங்கள் இருப்பதுண்டு. இவை விரைவில் உலர்ந்து
விழுந்துவிடும் என்பதால் சிகிச்சை தேவைப்படாது.
·
குழந்தைகளுக்கு சிவப்பு நிறத்தில்
பெரிய மருக்கள் இருப்பதுண்டு, இவையும் விழுந்துவிடும் வாய்ப்பு உண்டு.
·
தோலில் வெண் புள்ளிகள், சிவப்பு
புள்ளிகள், மஞ்சள் புள்ளிகள் தென்படலாம். இந்த பிரச்னைகளும் தானாகவே சரியாகிவிடும்.
அதனால் இதுபோன்ற அறிகுறிகளைக்
கண்டு குழந்தைக்கு ஏதோ பெரிய நோய் என்று பயப்படத் தேவையில்லை. ஒருசில வாரங்களில் குழந்தையின்
தோல் பிரச்னைகள் தீர்ந்து பளபளப்பாகிவிடும்.