பழுத்த வாழைப் பழத்தை நன்றாகப் பிசைந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து கழுவினால், சருமம் மிகவும் மிருதுவாகும். முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.
இரவு படுக்கும் முன், புதினா சாறு இரண்டு தேக்கரண்டி, அரை மூடி எலுமிச்சம்பழ சாறு ஆகியவற்றுடன் பயிற்றம்பருப்பு மாவை கலந்து முகத்தில் தடவிக் கொண்டு பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் ஒத்தடம் கொடுக்க முகம் சுத்தமாகும். பருவினால் ஏற்பட்ட தழும்பும் மறையும்.
ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.