உடல் வளர்க்கும் எள்ளு!! அழகும் தரும் தெரியுமா ??

உடல் வளர்க்கும் எள்ளு!! அழகும் தரும் தெரியுமா ??

லேசான கசப்பு மட்டும் துவர்ப்பு சுவையுடையதாக எள் இருக்கிறது. இது உடலுக்குத் தெம்பு, வலிமை, பொலிவு தரக்கூடியது. தோலுக்கும் பற்களுக்கும் கேசங்களுக்கும் உறுதி தரக்கூடியது. அசதியைப்போக்கித் தசைகளுக்குப் புத்துயிர் ஊட்டக்கூடியது.

மூளைக்குத் தெளிவைத் தரும் எள்ளுக்கு நல்ல பசியைத் தூண்டும் தன்மை இருப்பதால் உணவு அதிகம் சாப்பிட்டு உடல் எடை கூடுவதற்குப் பயன்படுகிறது.

எள்ளை தூளாக்கி வறுத்து சூடான சாதத்துடன் சிறிது நல்லெண்ணெய் கலந்து சாப்பிட வயிற்றில் ஏற்படும் கொதிப்பு, குடல் பிரச்னைகள் நீங்கும்.  வெல்லப்பாகுடன் இதைக்கூட்டி எள்ளுருண்டை, கொழுக்கட்டை முதலிய தின்பண்டங்களை சாப்பிடுவதால் உழைக்கும் மனப்பான்மையும் சுறுசுறுப்பும் வளரும். 

பற்கள், ஈறுகளில் பலம் குறைவாக இருப்பவர்கள் எள்ளை மென்று குதப்புவது நல்ல பலன் தருகிறது. மூளை களைப்பு உள்ளவர்களுக்கும் எள் அதிக அளவில் பலன் தருகிறது.

அதனால் சமையல் அறையில் எள்ளுக்கும் இடம் இருக்கட்டும். இட்லி, தோசைக்கு எள்ளூ சட்னி சாப்பிடுவது மிகவும் சுவையானது மட்டுமல்ல ஆரோக்கியமானதும் ஆகும்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்