ஒல்லியா பிட்டா இருக்கும் பல நடிகைகளின் ரகசியம் என்ன! இந்த ஒரு காய் தான்!

ஒல்லியா பிட்டா இருக்கும் பல நடிகைகளின் ரகசியம் என்ன! இந்த ஒரு காய் தான்!

பாகற்காயில் இருக்கும் இரும்புச் சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், விட்டமின் C , நார்ச்சத்து போன்ற உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன.

இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைத்துக்கொள்ள உதவும். இதனால் தேவையில்லாத கெட்ட கொழுப்புகளும் நீங்குவதால் உடல் எடை தானாகக் கரைகிறது. குறைவான கலோரியையும் கொண்டதால் தாராளமாக பாகற்காய் சாப்பிடலாம். உதாரணமாக 100 கிராம் பாகற்காய் ஜூஸில் 34 கலோரிகளே இருக்கின்றன.

இதில் நிறைந்துள்ள நார்ச்சத்தும் ஜீரண சக்தியை அதிகரிப்பதால், உணவில் இருக்கும் சத்துகளைப் பிரித்துக் கொடுக்கும். தேவையில்லாத கொழுப்பும் வெளியேற்றப்படும். எனவே உடல் எடையைக் குறைக்க விரும்புவோர், தினம் பாகற்காய் ஜூஸ் அருந்தினால் நல்ல பலன் கிடைக்கும்.

பாகற்காய் ஜூஸ் தயார் செய்யும் முறை. பாகற்காய் – 1 , எலுமிச்சை – 1/2 ஸ்பூன் , உப்பு – 1/2 ஸ்பூன்

செய்முறை : பாகற்காயில் உள்ள விதை மற்றும் வெள்ளை சதையை நீக்கிவிட்டு 30 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைக்கவும். பின் சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் மைய அரைக்கவும். தண்ணீர் தேவைக்கு பாகற்காய் ஊற வைத்த நீரைப் பயன்படுத்தலாம். அதோடு எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து மைய அரைத்து வடிகட்டினால் பாகற்காய் ஜூஸ் ரெடி.

Related posts

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

அம்மாடியோவ்! இந்த பழத்தின் விலை 71 ஆயிரம் ரூபாயாம்!