இந்த
ஸ்மார்ட் போன் மடிக்கக்கூடிய வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது இதன் சிறப்பு அம்சமாகும். 4.6 இன்ச்
டிஸ்பிலே கொண்டுள்ள
இந்த போனை விரித்தாள்7.3 இன்ச் ஆக
மாறும் இதுவே இதன் தனி சிறப்பு.
கடந்த
வாரம் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற “அன்பாக்கெட் 2019” விழாவில்
சாம்சங் நிறுவனம் , “சாம்சங்
காலக்ஸி போல்ட் “ என்ற
ஸ்மார்ட்
போனை சந்தையில் அறிமுகம் செய்தது. இதற்கு வாடிக்கையாளர்களின்மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது
அதன் காரணம் இதன் டிஸ்பிலேவை சுலபமாக மடிக்கக்கூடியவசதி தான்.ஆண்ட்ராய்டு 9.0 இயங்குதளத்தில் செயல்படும். இரட்டை நானோ சிம் வசதியை கொண்டுள்ளது .
மேலும் இதில் 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி இன்டெர்னல்மெமரியும் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த ஸ்மார்ட் போனில் மொத்தம் இரண்டு பேட்டரிகள் உள்ளன. இதன் பேட்டரி திறண் 4380 எம்.ஏ.எச் ஆகும். மேலும் இதில் பாஸ்ட் சார்ஜிங்
மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் உள்ளது
கேமராவை பொறுத்தவரையில்
முன்புறத்தில் 3 மற்றும் பின்புறத்தில் 3 கேமெராக்கள்
பொருத்தப்பட்டுள்ளன. மேலும் இது 6 சென்ஸார்
கேமெராக்களை கொண்டுள்ளது. இந்த போனை அமெரிக்கா மற்றும் சில நாடுகளில் வரும் ஏப்ரல்
26 ஆம் தேதி வெளியிட சாம்சங் நிறுவனம் முடிவு செய்த்துள்ளது. இந்திய மதிப்பில் இதன் விலை ரூ.1.41 லட்சம் ஆகும்.