உங்கள் உதடுகள் கருப்ப இருக்குனு கவலையா? அதை போக்க எளிய வழிகள்!

உங்கள் உதடுகள் கருப்ப இருக்குனு கவலையா? அதை போக்க எளிய வழிகள்!

இரவில் கற்றாழை ஜெல்லை உதட்டில் தடவலாம். அடுத்த நாள் கழுவி விடுங்கள். தொடர்ந்து செய்து வந்தால் பலன் கிடைக்கும். ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து, உதட்டில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். கிளசரினை பஞ்சில் நனைத்து உதட்டில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம்.

தினமும் ஒரு ஐஸ் கியூப் எடுத்து உதட்டில் தடவி மசாஜ் செய்யுங்கள். பீட்ரூட் சாறு, கேரட் சாறு, வெள்ளரி சாறு போன்றவற்றைகூட ஐஸ் கியூப்பாக்கி உதட்டில் தடவலாம்.  ஒரு விட்டமின் இ காப்சூல் எடுத்து, அதன் எண்ணெயை உதட்டில் தடவி வருவதும் பலன் தரும். 

தினமும் மாதுளை, திராட்சை, விட்டமின் சி உள்ள சிட்ரஸ் பழங்கள், 2-3 லிட்டர் தண்ணீர், நீர் மோர், இளநீர், பசுநெய் கலந்த உணவுகள், கீரைகள், பழச்சாறுகளை எடுத்து கொள்ளுங்கள். 

அடிக்கடி சளி, காய்ச்சல் என அவதிப்படுவோரின் உதட்டைப் பாருங்கள். அதிகம் தண்ணீர் அருந்தாதவர்கள் தங்களது உதட்டைப் பார்க்கவும். நோய் எதிர்ப்பு சக்தி தரும் உணவுகளை உண்டாலே கருமை நிற உதடு சரியாகும்.  மரபியல் காரணம் ரத்தசோகை அதிகமாக காபி, டீ குடிப்பது ஈட்டிங் டிஸ்ஆர்டர் லிப் மேக்கப்பை முறைப்படி நீக்காதது, போதிய நீர்ச்சத்து உடலில் இல்லாமை, பற்பசை அலர்ஜி அலுமினியம், காப்பர், மெர்குரி போன்ற கெமிக்கல்களின் விளைவு புகைப்பழக்கம், சூரிய கதிர்களின் தாக்கம், விட்டமின் குறைபாடு, அதிகமான இரும்புச்சத்து உடலில் இருப்பது, மருந்துகள், ஹார்மோன் பிரச்சனை உதடு பராமரிப்பின்மை ஆகிய காரணங்களால் உதடு கருப்பாகிறது.

பெட்ரோலியம் ஜெல்லி உதட்டுக்கு நல்லதல்ல. தேங்காய் எண்ணெய், ஷியா பட்டர், கொகோ பட்டர், கற்றாழை, அவகேடோ கலந்த லிப் பாம் தேர்ந்தெடுக்கலாம். அடர்நிறங்களைத் தவிர்ப்பது நல்லது. நல்ல தரமான, கெமிக்கல்கள் இல்லாத லிப்ஸ்டிக், லிப் பாம் பயன்படுத்தலாம். முடிந்தவரை லேசான நிறம் கொண்ட நியூட் லிப்ஸ்டிக்கை பயன்படுத்துங்கள். வீட்டில் இருக்கும்போது, தேங்காய் எண்ணெய், நெய், லிப் பாம் பயன்படுத்தலாம். நிறமில்லாத லிப் பாம் பயன்படுத்துங்கள். 

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்