பெண்களே மாதவிடாய் காலங்களில் மார்பகங்கள் வலிக்கிறதா? அஞ்ச தேவையில்லை ஏன்?

பெண்களே மாதவிடாய் காலங்களில் மார்பகங்கள் வலிக்கிறதா? அஞ்ச தேவையில்லை ஏன்?

மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன்களில் ஏற்றத்தாழ்வுகள் உண்டாகும். இதனால் மார்பகத்தில் உள்ள இரத்த குழாய்கள் விரிவடைந்து மார்பகத்தில் மாற்றங்களையும் வலியையும் உண்டாக்குகிறது. ஈஸ்ட்ரோஜன் சுரப்பு மார்பக நாளங்களில் விரிவை ஏற்படுத்துகிறது. உங்க மாதவிடாய் காலங்களில் 1 வாரத்திற்கு முன்பு புரோஜெஸ்ட்டிரோன் அதிகரிப்பால் மார்பகத்தில் உள்ள பால் சுரப்பிகள் பெருகும். இதனால் அந்த பகுதியில் மார்பக வலி உண்டாகிறது.

மாதவிடாய் காலங்களில் அதிக கொழுப்புள்ள உணவுகளை எடுத்துக் கொள்வதை தவிருங்கள்
.காபி, சாக்லேட்டுகள், டீ, குளிர் பானங்கள் இவற்றை தவிருங்கள். மாதவிடாய் ஆரம்பமாகும் 10 நாட்களுக்கு முன்பு இருந்தே உணவில் உப்பு சேர்ப்பதை குறைத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் மார்பக அளவிற்கு ஏற்றமாதிரி சரியான பிராவை தேர்ந்தெடுத்து அணியுங்கள். மார்பகத்தில் ஏற்படும் வலியை போக்க உடற்பயிற்சி சிலவற்றை செய்யுங்கள். விட்டமின் ஈ ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியமான உடல் எடையை பராமரியுங்கள், ஊட்டச்சத்துக்கள் மிக்க உணவுகளை உண்ணுங்கள்.

மாதவிடாய் காலங்களில் ஏற்படும் மார்பக வலியை குறித்து அதிகமாக கவலைப்பட தேவையில்லை. இருப்பினும் வேறு சில அறிகுறிகள் தென்பட்டால் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. ஏனெனில் அது மார்பக புற்றுநோயாக இருக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். மார்பகத்தில் அல்லது அக்குள்களில் கட்டிகள் காணப்படுதல்,

சிவந்து இரத்தம் வடிவது, சீழ் வடிவது, தூங்குவது கூட கடினமாக இருத்தல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் மகப்பேறு மருத்துவரை அணுகி பரிசோதித்து கொள்வது நல்லது. மார்பகங்களில் அளவு மாற்றம், காம்புகள் உள்நோக்கி திரும்புதல், சிவத்தல், மார்பக தோலில் மாற்றம் போன்றவை தென்பட்டாலும் உடனே நீங்கள் பரிசோதனை செய்வது நல்லது.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்