தங்கம் விலை கிடுகிடு உயர்வு! பவுன் 28 ஆயிரத்தைக் கடந்தது!

தங்கம் விலை கிடுகிடு உயர்வு! பவுன் 28 ஆயிரத்தைக் கடந்தது!

ஒரு சவரன் தங்கத்தின் விலை ஆகஸ்ட் 18, 2011ல் முதல் முறையாக 20 ஆயிரம் ரூபாயை
எட்டியது. அடுத்த இரண்டே நாட்கிளல் ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்து 21 ஆயிரத்தையும் தாண்டியது.

2017ஆம் ஆண்டில் ஏப்ரல் 30ஆம் தேதி ஒரு சவரன் தங்கத்தின் விலை 22,000 ரூபாயாக
அதிகரித்தது. அந்த ஆண்டிலேயே ஆகஸ்ட் மாதம் 23 ஆயிரத்தையும் செப்டம்பரில் 24 ஆயிரத்தையும்
கடந்துவிட்டது. 2013 முதல் 2018 வரை தங்கம் விலை 25 ஆயிரத்துக்கு உள்ளாகவே இருந்து
வந்தது.

இந்த ஆண்டு ஜனவரியில் ஒரு சவரன் தங்கம் விலை முதல் முறையாக 25,000 ரூபாய்க்கு
மேல் உயர்வு கண்டது. தொடர்ந்து கடந்த ஜூன் மாதத்தில் 26,000 ரூபாயையும் தாண்டியது.
ஜூலையில் 2019ல் 900 ரூபாய்க்கு மேல் உயர்ந்து 27,000 ரூபாயை நெருங்கியது. ஆகஸ்டில்
27 ஆயிரத்தைக் கடந்துவிட்டது.

நேற்றைய நிலவரப்படி ஆபரண தங்கத்தின் விலை 1 கிராமுக்கு ரூ. 3,630 ஆகவும், ஒரு
சவரனுக்கு ரூ. 29,040 ஆகவும், 22 கேரட் தங்கத்தின் விலையானது 1 கிராமுக்கு ரூ.3,473
ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ. 27,784 ஆகவும் இருந்தது.

இன்று சவரனுக்கு 568 ரூபாய் வரை உயர்ந்து 22 கேரட் தங்கத்தின் விலையானது 3,544 ஆகவும் ஒரு சவரன் தங்கத்தின் விலையானது ரூ.28,352 ஆகவும் இன்று விற்பனை செய்யப்படுகிறது.. அதேபோல் 24 கேரட் அளவிலான தங்கத்திற்கு ஒரு கிராம் ரூ.3,701 ஆகவும் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 29,608 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் தங்கத்தின் விலை ரூ.30,000 வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று சென்னையில் 22 கேரட் மற்றும் 24 கேரட் தங்கத்தின் விலை நிலவரம் கீழ்வருமாறு:

7.8.2019  – 1
grm – Rs. 3701/-, 8 grm – 29,608/-  ( 24
கேரட்)

7.8.2019 – 1 grm – Rs. 3544/-, 8 grm – 28,352/- (22 கேரட்)

வெள்ளி விலை இன்று கிராமுக்கு 46.80 ஆகவும் கிலோ ரூ.46,800
ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது..

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்