முடி கொட்டுவது என்பது பெரிய பிரச்னை. அதுவும் பிரசவத்துக்கு பிறகான முடி கொட்டுதல் பிரச்னை அதிகமாக இருக்கும். இதை எப்படி சமாளிக்கலாம். உங்கள் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே புதுமையான புரோட்டீன் ஹேர் பேக் தயாரிக்க முடியும். அதை இப்பதிவில் பார்க்கலாமா…
4 வகை புரோட்டீன் ஹேர் பேக் மற்றும் ஹேர் மாஸ்க்
புரோட்டீன் ரிச் ஹேர் பேக் 1
தேவையானவை
- வாழைப்பழம் – 1 மீடியம் அளவு
- தயிர் – 3 டேபிள் ஸ்பூன்
- தேன் – 1 டேபிள் ஸ்பூன்
- தேங்காய் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை
- இதையெல்லாம் சேர்த்து மிக்ஸியில் அடித்து பேஸ்டாக்கி கொள்ளுங்கள்.
- இதை ஒரு பவுலில் போட்டு கொள்ளுங்கள்.
- முடியில் மண்டையின் வேர்கால்களிலும் தடவலாம்.
- 20 நிமிடங்கள் கழித்து மிதமான ஷாம்பு போட்டு கழுவலாம். கண்டிஷனர்கூட பயன்படுத்திக் கொள்ளலாம்.
குறிப்பு:
- சுடுநீர், இளஞ்சூடான நீரில் குளிக்க வேண்டாம்.
- வாரம் ஒரு முறை இந்த ஹேர் மாஸ்க் போட்டு கொள்ளலாம்.
பலன்கள்
- முடி பிளவுகள் தடுக்கப்படும்.
- கேசம் சில்கியாக மாறும்.
- முடி உதிர்தல் நிற்கும்.
- முடிக்கு தேவையான சத்துகள் கிடைத்து ஆரோக்கியமாகும்.
இதையும் படிக்க: நகத்தின் நிறத்தைப் பார்த்தே நோயை கண்டுபிடிக்கலாம்?
புரோட்டீன் ஹேர் பேக் 2
தேவையானவை
- உளுந்து – ½ கப்
- வெந்தயம் – 2 டீஸ்பூன்
- கறிவேப்பிலை – 1 கைப்பிடி
செய்முறை
- உளுந்து, வெந்தயம், கறிவேப்பிலை முதல் நாள் இரவே நீர் ஊற்றி ஊற வைக்கவும்.
- அடுத்த நாள் அதை மிக்ஸியில் அரைத்து கூழாக்கி கொள்ளவும்.
- இதை முடி மற்றும் மண்டையின் வேர் கால்களிலும் தடவலாம்.
- 20 நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம்.
குறிப்பு
- தலைவலி, சளி, சைனஸ் இருப்பவர்கள் 15 நிமிடங்களுக்கு மேல் இந்த பேக்கை வைத்துக்கொள்ள வேண்டாம்.
- வாரம் ஒருமுறை இதைப் பயன்படுத்தலாம்.
- இதை அலச மிதமான ஷாம்புவை பயன்படுத்தலாம்.
பலன்கள்
- தீவிரமான முடி உதிர்தல் பிரச்னை இருந்தாலும் இந்த ஹேர் பேக் பயன்படுத்த சரியாகிவிடும்.
இதையும் படிக்க: ஒரே மாதத்தில் பளபளப்பான சருமம்… 10 புதுமையான இயற்கை
புரோட்டீன் ஹேர் மாஸ்க் 3
தேவையானவை
- வாழைப்பழம் – 1
- தேங்காய்ப் பால் – 2 டேபிள் ஸ்பூன்
- தேங்காய் எண்ணெய் – 1 டீஸ்பூன்
- பாதாம் எண்ணெய் – ½ டீஸ்பூன்
செய்முறை
- இதை எல்லாவற்றையும் ஒரு பவுலில் போட்டு நன்கு மசித்து கூழாக்கி கொள்ளவும்.
- தேவைப்பட்டால் மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றிக் கொள்ளலாம்.
- இதை முடி மற்றும் மண்டையின் வேர் கால்களிலும் தடவலாம்.
- 20-30 நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம்.
குறிப்பு
- அனைவரும் பயன்படுத்த ஏற்றது.
- இதை அலச ஷாம்பு, கண்டிஷனர்கூட பயன்படுத்தலாம்.
பலன்கள்
- அடங்காத முடியும் அடங்கும். சில்கியாக மாறும்.
- முடி உதிர்தல் நிற்கும்.
- முடியின் அடர்த்தியும் அதிகமாகும்.
- கட்டுக்கு அடங்காத முடி உள்ளவர்களுக்கு, இந்த பேக்கால் நல்ல மாற்றம் தெரியும்.
இதையும் படிக்க: நீங்காத ஸ்ட்ரெச் மார்க்ஸ்கூட நீங்கும்… இயற்கை வழி வைத்தியம்
புரோட்டீன் விட்டமின் ஹேர் மாஸ்க் 4
தேவையானவை
- செம்பருத்தி பவுடர் – 2 டீஸ்பூன்
- நெல்லி – 4
- தேங்காய் எண்ணெய் – 1 டீஸ்பூன்
- வாழைப்பழம் – ¼
செய்முறை
- ஒரு பவுலில் வாழைப்பழத்தை போட்டு கூழாக்கி கொள்ளவும்.
- அதில் நெல்லி ஜூஸை ஊற்றவும். நெல்லிக்காயை அறிந்து ஜூஸாக்கி வடிகட்டிதான் பயன்படுத்த வேண்டும்.
- இதனுடன் செம்பருத்தி பவுடர், தேங்காய் எண்ணெய் கலந்து பேஸ்டாக்கவும்.
- இதை முடி, மண்டையில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவலாம்.
பலன்கள்
- முடி உதிர்தல் விரைவில் நிக்கும்.
- முடியின் வளர்ச்சியும் நன்றாக இருக்கும்.
- முடியின் அடர்த்தியும் சீராகும்.
- மிருதுவான முடியாக மாறும்.
இதையும் படிக்க: கருமை படிந்த தொடைகளை பளிச்சென மாற்றும் இயற்கை சிகிச்சைகள்