குழந்தையின் முதல் உணவு என்றாலே அதில் கஞ்சிக்கு முக்கிய இடம் உண்டு. ஆம், முதல் உணவை சத்தானதாக மாற்ற நிறைய வழிகள் இருக்கிறது. கம்பு, திணை, ராகி, சோளம் என சிறுதானியங்களால் பல்வேறு விதமான கஞ்சிகளை செய்யலாம். சத்தும் அதிகம். சுவையும் பிரமாதம். தயாரிப்பதோ மிக மிக எளிது. பலனாக நம் குழந்தைகள் ஆரோக்கியமுடன் வளருவர்.
6 வகையான கஞ்சி வகைகள் செய்வது எப்படி?
#1.ராகி கஞ்சி
தேவையானவை
- ராகி மாவு – 2 டேபிள் ஸ்பூன்
- கருப்பட்டி அல்லது நாட்டு சர்க்கரை – 2 டீஸ்பூன்
- நட்ஸ் பவுடர் – 1 டீஸ்பூன்
- தண்ணீர் – தேவையான அளவு
Image Source : Sabaris Indian Diet recipes
செய்முறை
- பாத்திரத்தில் தேவையான தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.
- ராகி மாவை ¼ டம்ளர் தண்ணீரில் நன்கு கரைத்து, அடுப்பில் உள்ள பாத்திரத்தில் ஊற்றவும்.
- மிதமான தீயில் வைத்துக் கிளறி கொண்டே இருக்க, தேவையான கருப்பட்டி அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்துக் கிளறவும்.
- இறக்கும் முன் நட்ஸ் பவுடர் சேர்க்கலாம்.
- அடுப்பை நிறுத்திவிட்டு இளஞ்சூடாக மாறியதும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
- 6 மாதம் – 1 வயதுள்ள குழந்தைகளுக்கு இனிப்பு சேர்க்காமலே கொடுக்கலாம்.
#2.கம்பு கஞ்சி
தேவையானவை
- கம்பு மாவு – 2 டேபிள் ஸ்பூன்
- டேட்ஸ் சிரப் – 2 டீஸ்பூன்
- நட்ஸ் பவுடர் – 1 டீஸ்பூன்
- தண்ணீர் – தேவையான அளவு
Image Source : 7aum suvai
செய்முறை
- பாத்திரத்தில் தேவையான தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.
- கம்பு மாவை ¼ டம்ளர் தண்ணீரில் நன்கு கரைத்து, அடுப்பில் உள்ள பாத்திரத்தில் ஊற்றவும்.
- மிதமான தீயில் வைத்துக் கிளறவும்.
- நன்கு வெந்தவுடன் டேட்ஸ் சிரப் மற்றும் நட்ஸ் பவுடர் சேர்த்து இறக்கிவிடவும்.
- 6 மாதம் – 1 வயதுள்ள குழந்தைகளுக்கு இனிப்பு சேர்க்காமலே கொடுக்கலாம்.
இதையும் படிக்க: குழந்தைகளுக்கான காய்கறி பருப்பு கிச்சடி ரெசிபி
#3. திணை கஞ்சி
தேவையானவை
- திணை மாவு – 2 டேபிள் ஸ்பூன்
- தேங்காய்ப் பால் – ½ டம்ளர்
- வெல்லம் தூளாக்கியது – சிறிதளவு
- தண்ணீர் – தேவையான அளவு
Image Source : Jenacooking guide
செய்முறை
- பாத்திரத்தில் தேவையான தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.
- திணை மாவை ¼ டம்ளர் தண்ணீரில் நன்கு கரைத்து, அடுப்பில் உள்ள பாத்திரத்தில் ஊற்றவும்.
- மிதமான தீயில் வைத்து வேக விடவேண்டும்.
- வெந்தவுடன் தேங்காய்ப் பால், வெல்லம் சேர்த்துக் கலக்கவும்.
- 5 நிமிடம் கழித்து இறக்கிவிடவும்.
- 6 மாதம் – 1 வயதுள்ள குழந்தைகளுக்கு இனிப்பு சேர்க்காமலே கொடுக்கலாம்.
#4. சோள கஞ்சி
தேவையானவை
- சோள மாவு – 2 டேபிள் ஸ்பூன் (வெள்ளை சோளம்)
- கேரட் ப்யூரி – ¼ கப்
- இந்துப்பு – சிறிதளவு
- நறுக்கிய கொத்தமல்லி – 1 டேபிள் ஸ்பூன்
Image Source : Epicurious
செய்முறை
- பாத்திரத்தில் தேவையான தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.
- சோள மாவை ¼ டம்ளர் தண்ணீரில் நன்கு கரைத்து, அடுப்பில் உள்ள பாத்திரத்தில் ஊற்றவும்.
- மிதமான தீயில் வைத்து 3 நிமிடம் வேக விடவேண்டும்.
- இதில் கேரட் ப்யூரி சேர்த்துக் கிளறவும்.
- நன்கு வெந்ததும் இந்துப்பு சேர்த்துக் கலக்கி, இறக்கும் முன் கொத்தமல்லி தூவலாம்.
- 6 மாதம் – 1 வயதுள்ள குழந்தைகளுக்கு உப்பு சேர்க்காமலே கொடுக்கலாம்.
இதையும் படிக்க: பேபீஸ் ஸ்பெஷல்… 10 நிமிடங்களில் செய்யகூடிய 5 சூப் ரெசிபி…
#5. அரிசி கஞ்சி
தேவையானவை
- அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன்
- ஆப்பிள் கூழ் – ¼ கப்
- பட்டைத் தூள் – 1 சிட்டிகை
Image Source : great british chef
செய்முறை
- பாத்திரத்தில் தேவையான தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.
- அரிசி மாவை ¼ டம்ளர் தண்ணீரில் நன்கு கரைத்து, அடுப்பில் உள்ள பாத்திரத்தில் ஊற்றவும்.
- மிதமான தீயில் வைத்து 3 நிமிடம் வேக விடவேண்டும்.
- இதில் ஆப்பிள் கூழை சேர்த்துக் கிளறவும்.
- நன்கு வெந்ததும் பட்டைத் தூள் தூவலாம்.
- 1 வயது மேற்பட்ட குழந்தைகளுக்கு உப்பு அல்லது ஏதேனும் இனிப்பை சேர்க்கலாம்.
#6. வரகு கஞ்சி
தேவையானவை
- வரகு – ½ கப்
- பாசி பருப்பு – 1/4 கப்
- சீரகம் – ½ டீஸ்பூன்
- வெந்தயம் – ¼ டீஸ்பூன்
- நெய் – 2 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
- இந்துப்பு – சிறிதளவு
Image Source : vysyas Delicious recipes
செய்முறை
- குக்கரில் நெய் ஊற்றி சீரகம், வெந்தயம் போட்டு தாளிக்கவும்.
- கழுவி அரை மணி நேரம் ஊற வைத்த பாசி பருப்பு, வரகு ஆகியவற்றைக் குக்கரில் போட்டு, இந்துப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும்.
- தேவையான அளவு தண்ணீர் விட்டு 3 விசில் வந்த பின் இறக்கவும்.
- 6 மாதம் – 1 வயதுள்ள குழந்தைகளுக்கு உப்பு சேர்க்காமலே கொடுக்கலாம்.
இதையும் படிக்க: 1 வயது+ குழந்தைகளுக்கு ஏற்ற 5 விதவிதமான அவல் ரெசிபி