பின்னழகில் நறுக் என ஒரு கடி! பன்றித் தீவில் மாடல் அழகிக்கு நேர்ந்த விபரீதம்!

பின்னழகில் நறுக் என ஒரு கடி! பன்றித் தீவில் மாடல் அழகிக்கு நேர்ந்த விபரீதம்!

வெனிசுலாவைச் சேர்ந்த ஃபிட்னஸ் மாடல் மிச்செல் லெவின் (32 வயது).
இவர், அவ்வப்போது கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி, பலரையும் ஈர்ப்பது வழக்கம்.
இதேபோல, பஹாமஸ் தீவு அருகே, பன்றிகள் மட்டுமே வசிக்கும் பிக் தீவு என ஒரு இடம்
உள்ளது.

இங்கு, வசதி படைத்தவர்கள், உல்லாச பயணிகள், சமூகத்தில் உயர்
அந்தஸ்தில் இருப்பவர்கள் அவ்வப்போது சென்று, தனிமையில் சுற்றிபார்த்துவிட்டு,
புகைப்படங்கள் எடுத்துவருவார்கள். 

இந்நிலையில், குறிப்பிட்ட பன்றிகள் தீவுக்கு, மாடல் மிச்செல்
லெவின் தனது குழுவினருடன் நேரில் சென்று, கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தினார்.
பிகினி உடையில் அவர் ஒய்யாரமாக, கடற்கரையில் நின்றபடி போஸ் த
ந்து கொண்டிருந்தார்.

புகைப்பட நிபுணரும் போட்டோ பிடித்துள்ளார். எல்லாம் நல்லபடியாக
சென்றுகொண்டிருந்த நிலையில், திடீரென பன்றிகள்  ரூபத்தில் அவர்களுக்கு
பிரச்னை ஏற்பட்டது.

ஆம். ஆள் அரவமற்ற தீவில், போட்டோஷூட் நடத்துபவர்களை பார்த்ததும்
பன்றிகளுக்கு உற்சாகம் ஏற்பட்டு, அவர்களை உடனே கூட்டமாக சுற்றி வளைத்துள்ளது.

பன்றிகளிடம் இருந்து தப்பிக்க புகைப்பட குழுவினர் தப்பியோடிய
நிலையில், மாடல் மிச்செல் தனியாளாக மாட்டிக்கொண்டார். அவரை துரத்தி துரத்தி
பன்றிகள் முட்ட, அதில் ஒரு பன்றி அவரை தொடை மற்றும் பின்புறங்களில் செல்லமாகக்
கடித்தும் விட்டது.

பன்றி கடிக்கும்போது, மிச்செல் வலி தாங்காமல் அலறுகிறார். இதனை
அவரது நண்பர்கள் அப்படியே வீடியோவாக எடுத்துள்ளனர். இந்த வீடியோவை, மிச்செல்
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பன்றிகள் தீவில் தனக்கு நடந்த
திகிலான அனுபவம் என்று வர்ணித்துள்ளர்.

இந்த வீடியோ பதிவிட்ட சில மணி நேரத்திலேயே, இணையத்தில் வைரலானது.
இதுவரை 57 லட்சம் முறை இந்த வீடியோ பார்க்கப்பட்டுள்ளது. அத்துடன், ஆயிரக்கணக்கான
கமெண்ட்களும் பதிவிடப்பட்டுள்ளன.

பலரும் மிச்செலை கேலி செய்தும், ஆறுதல் தெரிவித்தும்
பதிவிட்டு வருகின்றனர். அதேசமயம், மிச்செலை கடித்த பன்றி செல்லமாகக்
கடித்ததால், ரத்த காயம் எதுவும் அவருக்கு ஏற்படவில்லை. அதனால், அவருக்கு எந்த
பாதிப்பும் இல்லை என்று அவரது கணவர் ஜிம்மி குறிப்பிட்டுள்ளார்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்