உடலுறவில் உச்சக் கட்டத்தை அடைந்த பிறகு, இரண்டாம் முறையாக உறவுக்கு தயாராவது கடினம் என்று பொதுவாக நினைப்பதுண்டு. பெண்கள், உச்சக் கட்டத்தை அடைந்த உடனே அடுத்தச் சுற்றுக்கு தயாராகி விடுவார்கள். ஆனால், ஆண்களை பொறுத்தமட்டில் அடுத்த முறை உறவு கொள்ள உடனடியாக தயாராவது எளிதல்ல என்றாலும் அது அவர்களின் குறையல்ல. ஆண்களின் உயிரியல் அமைப்பே அப்படித்தான் அமைந்துள்ளது.
ஒருவர் பாலுறவின் உச்சத்தை தொட்ட மறுகணத்திலிருந்து பாலியல் களைப்பு என்னும் வேளை தொடங்குகிறது. பாலுறவில் பெண்களுக்கு பல உச்சக்கட்ட நிலைகள் இருப்பதால் பாலியல் களைப்பு ஆண்கள் அளவுக்கு நீண்டதாக இருப்பதில்லை. ஆண்களை பொறுத்தமட்டில் விந்து வெளியேறும் கணத்திலிருந்து சில நிமிடங்கள் முதல் சிலருக்கு சில நாள்கள் வரை பாலியல் களைப்பு நீடிக்க வாய்ப்பு உள்ளது.
புதிதாக பாலுறவில் ஈடுபடுபவர்களுக்கு பாலியல் களைப்பு,எப்போதாவது ஏற்படும். தனிப்பட்ட மனிதனின் உணர்ச்சி, மது பழக்கம், வேறு நோய்களுக்காக சாப்பிடும் மருந்துகள், தனிப்பட்ட மனிதனின் உணர்வுப் பூர்வமான திருப்தி ஆகியவை தீர்மானிக்கின்றன. விந்து வெளிப்பட்டவுடன், ஆணின் உடல் அதிக வேலையினிமித்தம் களைப்புற்றதுபோல் தளர்வடைகிறது. பரிவு நரம்பு மண்டலம் உடலை சாந்தப்படுத்தி இயல்பு நிலைக்கு திரும்ப உதவுகிறது.
பதின்ம வயது இளைஞனுக்கு பாலியல் களைப்பு சில நிமிடங்களே நீடிக்கும். 30 வயதான ஆண் என்றால் மீண்டும் கிளர்ச்சியுறுவது சற்று கடினம். 50 மற்றும் அதற்கு மூத்தவர்கள் என்றால் ஒரு நாளைக்கு அதிகபட்சம் ஒரு முறை மட்டுமே உச்சக்கட்டத்தை அடைய முடியும். வயதை பொறுத்து ஒருவர் மறுபடியும் பாலியல் கிளர்ச்சியுறுவதற்கு 12 முதல் 24 மணி நேரம் ஆகக்கூடும்.
பாலியல் கிளர்ச்சி புதிய நிலைகளில் உடலுறவு கொள்ளுதல், உடலுறவு கொள்ளும் முன்பு சுய புணர்ச்சி செய்யாமலிருத்தல், உடலுறவுக்கிடையேயான நேரத்தை மாற்றியமைத்தல், இணையோடு சேர்ந்து புதிய முறைகளை செய்து பார்த்தல் ஆகியவற்றின் மூலம் கிளர்ச்சியை தூண்டலாம்.