·
வாரம் இரண்டு நாட்கள் பப்பாளிப்பழத்தை முகத்திலும் தோலிலும்
பூசி, வெந்நீரில் கழுவினால் முகம் மற்றும் தோல் பளபளப்பாக மாறிவிடும்.
·
அடிக்கடி பப்பாளி எடுத்துக்கொண்டால் உடலில் கொழுப்புச்சத்து
மளமளவென குறைகிறது. வயிற்றுப்போக்கு, அல்சருக்கும் நல்ல மருந்து.
·
வைட்டமின் சத்துக்கள் நிறைய இருப்பதால் கண் பார்வையை
கூர்மையாக்குகிறது.
·
தசை வளர்ச்சி மற்றும் ரத்தவிருத்திக்கும் உதவிபுரியும்
பப்பாளியிடம் நோய் எதிர்ப்பு சக்தியும் நிரம்பவே இருக்கிறது.
பக்கவாதத்தை பக்கத்தில் வரவிடாது காலிஃப்ளவர்
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலும் விரும்பக்கூடிய அற்புத சுவைகொண்ட காலிஃப்ளவரில்
ஏராளமான மருத்துவ குணங்கள் நிரம்பியுள்ளன.
·
ஒமேகா-3 அமிலங்களும், வைட்டமின் சத்துக்களும் நிரம்பியிருப்பதால்
உடல்பருமன், நீரிழிவு, அழற்சி போன்ற பிரச்னைகளைத் தீர்க்கிறது.
·
காலிஃப்ளவரில் அல்லிசின் அதிகமாக இருப்பதால் பக்கவாதம்,
இதயக்கோளாறு நேராமல் பாதுகாக்கிறது.
·
மெக்னீசியம் மற்றும் வைட்டமின் நிரம்பியிருப்பதால்
புற்றுநோய், தொற்றுநோய் மற்றும் மன அழுத்தத்தில் இருந்து விடுபட முடியும்.
·
நார்ச்சத்து இருப்பதால் செரிமானத்தை அதிகப்படுத்தி
ஜீரண உறுப்புகளின் ஆரோக்கியத்தைக் காப்பாற்றுகிறது.
தைராய்டு பிரச்னைகளை விரட்டியடிக்கும் செளசெள
காய் விரும்பும் காட்டும் நபர்களுக்குக்கூட செளசெள அவ்வளவாக பிடிப்பதில்லை.
இதில் வைட்டமின், கார்போஹைட்ரேட், புரதம் போன்ற சத்துக்கள் நிரம்பியுள்ளன.
·
வாரம் ஒரு முறை செளசெள சாப்பிட்டால் மலச்சிக்கல் வராது.
மேலும் இதில் கால்சியம் இருப்பதால் எலும்புகள் வலுப்பெற உதவுகிறது.
·
இந்தக் காயில் காணப்படும் காப்பர், மாங்கனீஸ் சத்து காரணமாக
தைராய்டு நோய்க்கு எதிராக சிறப்பாக செயல்புரிகிறது.
·
நரம்புத்தளர்ச்சி மற்றும் உயர் ரத்தஅழுத்த பிரச்னைகளைக்
கட்டுப்படுத்துவதுடன் கொழுப்பையும் குறைக்கிறது.
·
இவற்றில் காணப்படும் வைட்டமின்கள் புற்றுநோய் செல்களைத்
தடுக்கும் ஆற்றல் வாய்ந்தது. மேலும் தோல் சுருக்கத்தையும் சரிப்படுத்துகிறது.