விற்பனையில் கலக்கும் ஒன் பிளஸ் 7! ஏன் வாங்கலாம்? ஏன் வாங்க கூடாது?

விற்பனையில் கலக்கும் ஒன் பிளஸ் 7! ஏன் வாங்கலாம்? ஏன் வாங்க கூடாது?

ஒன் ப்ளஸ்  7 ப்ரோ  ஸ்மார்ட்  போன் ஒன் ப்ளஸ் 6T – யை விட மிக சிறப்பான  அப்டேட்ஸ் உடன் வெளியீட்டு உள்ளது. நீங்கள் இந்த ஸ்மார்ட் போனை வாங்க நினைத்தால் இதோ அதன் சிறப்பம்சங்கள்.  

இதன் முக்கிய சிறப்பம்சமாக கருதப்படுவது இதன் டிஸ்பிலே. முதன்  முறையாக  ஒன் ப்ளஸ் நிறுவனம் எந்த ஒரு நாட்ச்சும் இல்லாமல்  90Hz, புல் HD டிஸ்பிலே உடன் இந்த புதிய வகை ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்ய உள்ளது.

இதில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 ப்ராஸ்ஸர் பயன்படுத்தப்பட்டு உள்ளது. ஸ்மார்ட் போன்  4,000mAh  பேட்டரி கொண்டுள்ளது. மேலும் இது பாஸ்ட் சார்ஜிங் வசதியும் கொண்டுள்ளது.

இதனுடைய அடுத்த சிறப்பம்சம் இதன் கேமரா தான்.  ஒன் ப்ளஸ் 7, 48MP+ 20MP + 5MP ட்ரிப்பிள் ரியர் கேமெராவுடன் வெளியாக உள்ளது.  மேலும் பாப்அப் செலஃபீ கேமரா வசதியும் கொண்டுள்ளது.

இவ்வளவு சிறப்பம்சங்களை இந்த ஸ்மார்ட் போன் கொண்டிருந்தாலும் இதன் விலை மிகவும் அதிகம் என்பதே இதன் மிக பெரிய குறைபாடாகும்.

6ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட் போன் ரூ. 48,999 ஆகும். மேலும்  8ஜிபி மற்றும் 12ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட் போன் விலை முறையே ரூ.52,999 மற்றும்  ரூ.57,999  ஆகும்.

ஒன் பிளஸ் 7 ஸ்மார்ட் போனின் விலை ரூ.32,999 ஆகும்.  ஒன் பிளஸ் 7 மற்றும் ஒன் பிளஸ் 7 ப்ரோ இரண்டு விதமான ஸ்மார்ட் போன்களும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 ப்ராஸ்ஸர் கொண்டுள்ளது.

இதில் வயர்லெஸ் சார்ஜிங் வசதி இந்த ஸ்மார்ட்  போனில் இடம் பெறவில்லை.  இதில் 3.5mm ஹெட் போன் ஜாக் வசதியும் இல்லை.

சாம்சங் கேலக்சி S10e மற்றும் ஆப்பிள் ஐபோன் போன்ற போன்களில் உள்ள வாட்டர் ப்ரூப் வசதி ஒன் ப்ளஸ்  7 ப்ரோவில்  இல்லை.

Related posts

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

இரும்பு போல உறுதி தரும் கேழ்வரகு !!