இவர் ஆந்திர மாநிலம் குண்ட்டூர் பகுதியை சேர்ந்தவர். இவர் தள்ளாத வயதிலும் யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல் தமது தேவைகளை தானே பூர்த்தி செய்துகொண்டுள்ளார். வீட்டு வேலைகளை சுறுசுறுப்புடன் செய்வதோடு ஒவ்வொரு நாளும் வித விதமான உணவுகளை சமைத்து அசத்தியுமுள்ளார்.
இவருடைய கைப்பக்குவம் வீட்டினரை மட்டுமல்ல இணையதள சமையல் பிரியர்களையும் அடிமையாக்கியுள்ளது. இவர் தனது சமையல் வீடீயோக்களை தனது பேரன் லக்ஷ்மணன் உதவியோடு இணையத்தில் வெளியீட்டுள்ளார். இவர் கிராமத்து சமையல் முதல் KFC சிக்கன் வரை சமைப்பதில் வல்லவர் மஸ்தானம்மா எப்பொழுதும் சமைப்பதற்கு விறகு அடுப்பையும் மண் சட்டியையும் தான் பயன்படுத்தினார். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளில் பன்னிரண்டு லட்சம் சந்தாதாரர்களை கொண்டுள்ளார் ஒருநாள் தமது நண்பர்களுடன் சேர்ந்து பாட்டி சமைத்ததை லட்சுமணன் தற்செயலாக வீடியோ பதிவு செய்து பதிவிட்டிருக்கிறார். அது வைரலாக இணையத்தில் பரவியுள்ளது. அதற்கு கிடைத்த வரவேற்பை பார்த்ததும் சிறுவயது முதலிலேயே தமது பாட்டி அற்புதமாக சமைத்து வருவது நினைவுக்கு வந்திருக்கிறது. பிறகென்ன… உடனே பாட்டி சமைப்பதை வீடியோ எடுத்து செய்முறையுடன் பதிவிட தொடங்கிவிட்டார். மஸ்தானம்மா சமீபத்தில் தமது 106-வது பிறந்த நாளை கொண்டாடினார். அதையும் வீடியோவாக இணையத்தில் பதிவேற்றி இருந்தார். மஸ்தானம்மா தன்னுடைய 11 வது வயதில் திருமணம் செய்துயிருக்கிறார் இவருக்கு 5 மகன்கள் தன்னுடைய 22 வது வயதில் கணவரை இழந்தார். அவரே தனிஆளாய் மகன்களை வளர்த்தார். தனது வாழ்க்கை முழுவதையும் யாரையும் எதிர்பார்க்காமல் சொந்தக்காலில் வாழ்ந்து காட்டியுள்ளார். இத்தகைய பெருமை மிக்க மஸ்தானம்மாவின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திப்போம்.