மிராஜ் சிங் ரத்தோர்! பிறந்த குழந்தைக்கு போர் விமாத்தின் பெயரை சூட்டிய தேசப்பற்று தாய்-தந்தை!

மிராஜ் சிங் ரத்தோர்! பிறந்த குழந்தைக்கு போர் விமாத்தின் பெயரை சூட்டிய தேசப்பற்று தாய்-தந்தை!

இந்திய விமானப்படை பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய அதே தினத்தில் பிறந்த குழந்தைக்கு பெற்றோர் வைத்த பெயர் என்ன தெரியுமா ? – மிராஜ்
புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகளின் தற்கொலைப் படைத் தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் பலியான சம்பவம் தேசத்தின் அத்தனை இதயங்களுக்கும் வலித்தது. உரிய பதிலடி கொடுக்க வேண்டும் என்ற குமுறல்களுக்கு இவ்வளவு விரைவில் தீர்வு கிடைக்கும் என எவரும் எதிர்பார்க்கவில்லை.
செவ்வாய் கிழமை காலை உறக்கத்தில் இருந்து எழுந்த இந்திய மக்களுக்கு கிடைத்த முதல் செய்தியே இந்திய விமானப் படை பாகிஸ்தான் எல்லைக்குள் நடத்திய அதி பராக்கிரமத் தாக்குதல் தான் இந்தத் தாக்குதலை நாடு முழுவதும் மக்கள் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும், வெற்றிப் பேரணி நடத்தியும் கோலாகலகலமாகக் கொண்டாடி வருகின்றனர்.
அரசியல் தலைவர்கள், பொது மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் இந்திய விமானப் படையினருக்கு வீர வணக்கம் செலுத்தி வருகின்றனர்.
அவர்களையேல்லாம் விஞ்சி விமானப் படையினருக்கு வெகு சிறப்பான மரியாதையை செய்திருக்கிறார்கள் ராஜஸ்தானின் நகோர் நகரைச் சேர்ந்த ஒரு தம்பதி.
தங்களுக்கு பிறந்த குழந்தைக்கு அவர்கள் வைத்த பெயர் மிராஜ். தங்கள் குழந்தையும் விமானப் படையில் சேர்ந்து நாட்டுக்கு சேவையாற்றுவான் என நம்புவதாக குழந்தையின் தந்தை மஹவீர் சிங் ரத்தோர் தெரிவித்தார். 
மகாவீரின் மனைவி சோனம் திங்கட் கிழமைக்கும், செவ்வாய்க் கிழமைக்கும் இடைப்பட்ட நள்ளிரவில் பிரசவ வலியெடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு குழந்தை பிறந்த நேரம் என்ன தெரியுமா? இந்திய விமானப் படையின் மிராஜ் விமானங்கள் பாகிஸ்தான் எல்லைக்கு ஜெய்ஷ் – இ – முகமது தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதலைத் தொடங்கிய அதே அதிகாலைல் 3.30 மணி.
குழந்தை பிறந்த தகவல் பரவியதும் குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து ஒருமித்து எடுத்த முடிவு குழந்தைக்கு மிராஜ் சிங் ரதோர் என பெயர் வைக்க வேண்டும் என்பதுதான். இந்திய விமானப் படையின் தாக்குதல் வரலாற்றில் சிறப்பான இடத்தைப் பிடிக்கப் போவது எவ்வளவு நிதர்சனமோ அந்த அளவுக்கு இந்தக் குழந்தையும் விமானப் படையின் தாக்குதலுக்கு வாழ்நாள் சாட்சியாக விளங்கப் போவதும் நிதர்சனமான உண்மை.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்