கைவசம் இது இருந்தால் போதும், விஷத்தை கூட முறியடித்துவிடலாம்

கைவசம் இது இருந்தால் போதும், விஷத்தை கூட முறியடித்துவிடலாம்

அகோரஸ் காலமஸ் (Acorus Calamus) என்ற அறிவியல்
பெயர் கொண்ட இது ஆங்கிலத்தில் ஸ்வீட் ஃப்ளாக் (Sweet Flag) என்று அழைக்கப்படுகிறது.

இது
குழந்தைகளின் நரம்புகள் பலம் பெற்று மூளை சிறப்பாக செயல்பட உதவுகிறது. வீடுகளில் கட்டாயம் வசம்பு வைத்திருப்பார்கள். குறிப்பாக பிறந்த குழந்தைக்கு தினமும் வசம்பை உரசி நாக்கில் தடவுவதுண்டு. காரணம் குழந்தை சாப்பிடும் உணவாலோ அல்லது அலர்ஜியாலோ விஷத்தன்மை குழந்தைக்கு பரவக் கூடாது என்பதற்காக கொடுக்கப்படும்.

வசம்பை
தூள் செய்து இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா வகையான தொற்று நோய்களும் நீங்கி விடும். வசம்பு எப்பேர்ப்பட்ட கொடிய விஷத் தன்மையும் போக்கக் கூடியது. அதனால் கட்டாயம் வீட்டில் வசம்பு வைத்திருக்க வேண்டியது அவசியம். விஷம் அருந்தியவர்களுக்கு கூட உடனேயே இரண்டு மூன்று டீஸ்பூன் வசம்பை கொடுத்தால் விஷம் வெளியே வந்து விடும். வசம்பை பயன்படுத்தி சளி இருமல் செரிமான பிரச்சனைகள் போக்கும் மருந்துகளைத் தயாரிக்கிறார்கள்.

வயிற்று வலி, அல்சர் போன்ற நோய்களை குணப்படுத்தவல்லது.
நெஞ்சு
சளியை போக்க
கூடிய அரிய மருந்தாகவும் வசம்பு
செயல் படுகிறது. அதிகமாக
எடுத்துக்
கொண்டால் குமட்டல் ஏற்படும். அளவோடு பயன்படுத்தினால் மிகுந்த நன்மையைத் தரும்.

வசம்புடன் மஞ்சளை வைத்து சிறிது நீர் தெளித்து
மையாக அரைத்து தேள், பூரான், வண்டுக்கடிவாயில் பூசிவர விஷம் முறியும்.  கடுப்ப முற்றிலும் நீங்கும்.

வசம்புடன் பூண்டு வைத்து அரைத்து வெல்லத்துடன்
சேர்த்துத் தின்றால் குடலில் உள்ள தீமை தரும் பூச்சிகள் மலத்துடன் வெளிப்படும்.

கால்நடைகளுக்கு தொற்று நோய்கள் பரவாமல் இருக்கவும் பயன்படுகிறது.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்