பெண் வயிற்றில் இருந்து சிசுவை வெளியே எடுத்து ஆப்பரேசன்! மீண்டும் கருவுக்குள் வைக்கப்பட்ட மெடிக்கல் மிராக்கிள்!

பெண் வயிற்றில் இருந்து சிசுவை வெளியே எடுத்து ஆப்பரேசன்! மீண்டும் கருவுக்குள் வைக்கப்பட்ட மெடிக்கல் மிராக்கிள்!

பிரிட்டனின் எஸ்ஸெக்ஸ் நகரைச் சேர்ந்தவர் பெதன் சிம்சன். கருவுற்றிருக்கும் இவர் வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளுக்கு தவறாமல் சென்றுவிடுவார். கருவுக்கு 20 வாரம் ஆகும் நிலையில் வழக்கம் போல அவர் பரிசோதனைக்குச் சென்றார்.

 

அப்போது ஸ்கேன் பரிசோதனையில் குழந்தையின் தலை உரிய அளவுக்கு வளர்ச்சி இல்லாமல் இருந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனைகளில் ஸ்பைனா பிஃபிடா என்ற முதுகெலும்பைத் தாக்கும் வளர்ச்சிக் குறைபாட்டு நோயால் சிசு பாதிக்கப்பட்டது தெரியவந்தது.

 

இதன் காரணமாக சிசுவின் முதுகெலும்பு முறையான வளர்ச்சி இன்றி இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இது குழந்தையின் நடக்கும் திறனைப் பாதிக்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்

 

பெதன் சிம்சனுக்கும் அவரது கணவருக்கும் மருத்துவர்கள் மூன்று வகையான வாய்ப்புகளைத் தெரிவித்தனர். ஒன்று கருவைக் கலைத்து விடுவது அல்லது கருவை அதே நிலையில் வளர விடுவது. மூன்றாவதாக சிசுவை வெளியில் எடுத்து முதுகெலும்பில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு மீண்டும் கருப்பையில் இட்டு வளரச் செய்வது

 

அந்தத் தம்பதி மிகவும் துணிச்சலாக மூன்றாவது வாய்ப்புக்கு ஒப்புதல் தெரிவித்தனர்.
இதையடுத்து பெதனுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டு சிசுவை வெளியில் எடுத்த மருத்துவர்கள் சிசுவுக்கும் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு மீண்டும் கருப்பைக்குள்ளேயே வைத்தனர்.

 

தற்போது குழதையின் வளர்ச்சி முறையாக இருக்கும் நிலையில் பெதன் வழக்கமான மருத்துவக் கண்காணிப்பில் இருக்கிறார்.
அவருக்கு ஏப்ரல் மாதத்தில் பிரசவத்துக்கான தேதி கொடுக்கப்பட்டுள்ளது.

 

பிரிட்டனில் இத்தகைய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட
4-
வது பெண் பெதன் ஆவார்கருப்பையில் இருந்து சிசுவை வெளியே எடுத்து ஆப்பரேசன்
செய்திருப்பது மெடிக்கல் மிராக்கிள் என்று பார்க்கப்படுகிறது.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்