அத்திப்பழத்தின் அற்புத மருத்துவகுணங்கள்!தெரிஞ்சா தொடர்ந்து சாப்பிடுங்க!

அத்திப்பழத்தின் அற்புத மருத்துவகுணங்கள்!தெரிஞ்சா தொடர்ந்து சாப்பிடுங்க!

அத்திப்பழத்தில் பொட்டாசியம் இருப்பதால் இது உங்கள் உடலில் இருக்கும் இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள உதவுகின்றது.மேலும் சோடியம் ஏற்படுத்தும் தீய விளைவுகளை இது எதிர்த்து நல்ல பலன்களை தருகின்றது.

அத்திப்பழத்தை எலுமிச்சை பழ சாரோடு சேர்த்து முகத்தில் தேய்த்து வந்தால், நல்ல பொலிவும், புத்துணர்ச்சியும் உங்கள் முகத்திற்கு கிடைக்கும். அத்திப்பழத்தை தேனோடு சேர்த்து நன்கு மசித்து உங்கள் சருமத்தில் தேய்த்து மசாஜ் செய்து வந்தால், உங்கள் முகத்தில் இருக்கும் பருக்கள் மறைவதை நீங்கள் காணலாம். இது உங்கள் முகப்பருக்களை போக்க ஒரு நல்ல தீர்வாக இருக்கும்.

அத்திப்பழ பேஸ்பேக் உங்களுக்கு நிச்சயம் நல்ல பலனைத் தரும். இதில் நிறைந்திருக்கும் வைட்டமின் C மற்றும் பிற சத்துக்கள் உங்கள் முகத்திற்கு தேவையான சத்துக்கள் மற்றும் போஷாக்கைத் தரும். அத்திப்ழத்தின் தோல் உங்கள் சருமத்தில் இருக்கும் இறந்த அணுக்களை அகற்றி நல்ல மிருதுவான சருமத்தை கொடுக்கும்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்