கட்சிக்கு கலயத்தில் பழைய சோறு! ஜிஎஸ்டியுடன் ரூ.50! மதுரை ஓட்டலில் சுடச்சுட விற்பனை!

கட்சிக்கு கலயத்தில் பழைய சோறு! ஜிஎஸ்டியுடன் ரூ.50! மதுரை ஓட்டலில் சுடச்சுட விற்பனை!

இது அப்பகுதி மக்களிடையே அதிக வரவேற்பை பெற்று வருகிறது.வீட்டில் மிஞ்சிய சோற்றை குப்பையில் கொட்டும் நகர்புற கலச்சாரத்துக்கு மத்தியில் உடலுக்கு குளிர்ச்சியை தரும் பழைய சோறு ஜி.எஸ்.டியுடன் மதுரையில் உள்ள ஓட்டல் ஒன்றில் விற்பனைக்கு வந்துள்ளது.

தற்போது  உணவு பழக்கங்கள் மாறிவரும் இந்த நிலையில்  மீண்டும் ஆரோக்கியமான உணவை நோக்கி மக்கள் நகர தொடங்கி இருக்கின்றனர் என்பதற்கான அறிகுறிதான் மதுரை மாட்டுதாவணியில் பழைய சோறு விற்பனை செய்து வருகின்றனர்.பழைய சோற்றில் மோர் கலந்து பச்சைமிளகாயும், வெங்காயமும் சேர்த்து சாப்பிட்டால் அது உடலுக்கு குளிர்ச்சியையும் உள்ளத்துக்கு சுறு சுறுப்பையும் கொடுத்தது.

கால ஓட்டத்துக்கு ஏற்ப உடல் உழைப்பு குறைந்த பணிகளில் ஈடுபடும் படித்தவர்கள் மற்றும் அவசர அவசரமாக அலுவலகத்திற்கு செல்லும் நகரவாசிகள் இட்லி, தோசை என்றும் வட நாட்டு உணவான புரோட்டா, சப்பாத்தி, பூரி, பானி பூரி என்றும் அன்னிய உணவுகளான பீட்சா, பர்கர், சாண்ட்விட்ஜ் என்றும் திசைமாறினர்.இதனால் பெரும்பாலான வீட்டில் மிச்சமாகும் சாப்பாடு பழைய சோறாகி குப்பைக்கும், ஆடு மாடுகளுக்கும் உணவாக வைக்கப்பட்டு வருகின்றது.

கஞ்சிகளையத்தில் பழைய சோறு, தொட்டுக்கொள்ள பச்சை மிளகாய், வெங்காயம், சீனியரக்காய் வத்தல், ஊறுகாய் என உச்சி வெயிலில் வரும் வாடிக்கையாளரை குளிர வைக்கும் பழைய சோறு காம்போவை அறிமுகப்படுத்தியுள்ளனர். இதன் விலை ஜிஎஸ்டி உடன் சேர்த்து50 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர். அதனை நம்மவர்கள் ஸ்பூனில் அள்ளி சாப்பிடுவதை காணும் போது, காலச் சக்கரம் வேகமாக சுழல்வதை கண்கூடாக காணமுடிகின்றது.

தங்கள் ஓட்டலில் பழைய சோறு விற்பனை செய்யபடுவதாக இணையத்தில் தகவல் பரவியவுடன் ஏராளமான படித்த இளைஞர்கள் பழைய சோற்றின் மகத்துவம் அறிந்து ஓட்டலுக்கு தேடி வந்து சாப்பிடுவதாகவும், இன்னும் பலர் ஸ்விக்கி, உபர் ஈட்ஸ், சுமோட்டோ போன்ற ஆன்லைன் உணவு பரிமாற்ற நிறுவனங்கள் மூலம் ஆன்லைனில் ஆர்டர் செய்து பார்சலாக வாங்கிச்சென்று சாப்பிடுவதாக ஓட்டலின் மேலாளர் பெருமை கொள்கிறார். தொடர்ந்து தன் உணவகத்தை பாரம்பரிய உணவாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்