இந்த நிறுவனம் வருடா வருடம் லாக் தி பாக்ஸ் (Lock the Box) எனும் நிகழ்ச்சியை முக்கியமான மெட்ரோ நகரங்களில் நடத்தி வருகிறது. லாக் தி பாக்ஸ் என்பது புத்தகப்பிரியர்களுக்காக நடத்தப்படும் புத்தக திருவிழா போன்ற நிகழ்ச்சியாகும். இதில் ஆயிரகணக்கில் ஏற்கனவே உபயோகிக்கப்பட்ட புத்தகங்கள் இடம்பெறும்.
உங்களுக்கு ஒரு அட்டைப்பெட்டி வழங்கப்படும். அந்த அட்டைப்பெட்டியில் உங்களுக்கு பிடித்தமான புத்தகங்களை கொண்டு அடுக்கலாம். அந்த அட்டைப்பெட்டி முழுவதாகும்வரை நீங்கள் அடுக்கியப்பிறகு அவர்கள் அதை பேக் செய்து அட்டைபெட்டியோடு உங்களுக்கு குடுத்துவிடுவார்கள் ஒரு அட்டைப்பெட்டிக்கு இவ்வளவு தொகை என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதன்படி உங்களிடம் பணம் பெற்றுக்கொள்வார்கள். நீங்கள் எத்தனை புத்தகம் எந்த விலையுள்ள புத்தகங்களை பெட்டியில் வைத்துள்ளீர்கள் என்பதெல்லாம் கணக்கே கிடையாது.
பெட்டியின் விலை விபரம்: இந்த பெட்டிகள் மூன்று அளவுகளில் உள்ளன.
1.Hercules Box -28 to 30 Books –Rs.2499
2.Persues Box – 15 to 17 Books – RS 1499
3.Odysseus Box- 8 to 10 Books – Rs 999
இந்த lock the Box நிகழ்வு நமது சென்னையில் வரும் டிசம்பர் 13 முதல் தொடங்குகிறது. 1 மில்லியனுக்கும் அதிகமான புத்தகங்கள் இடம் பெறுவதாக கூறியுள்ளனர். இந்த நிகழ்வில் முக்கியமான விதி புத்தகங்கள் அடுக்கப்பட்ட பின்பு பெட்டியை மூட முடிய வேண்டும். பெட்டியை மூட முடியா அளவு புத்தகங்களை குவித்து சென்றால் ஒத்துக்க மாட்டார்கள்.
நிகழ்வு நடைப்பெறும் நாள் : 13.12.2019 முதல் 22.12.2019 வரை. இடம்: விஜயா மகால், டி நகர்,சென்னை
எனவே சிறுவர்களை வைத்திருக்கும் பெற்றோர்கள் லாக் தி பாக்ஸ் நிகழ்வில் அவர்களுக்கு ஒரு பெட்டியை வாங்கி கொடுத்தால் அவர்கள் வேண்டுமென்ற காமிக்ஸ் சிறுவர் இலக்கியம் என வாங்கி கொள்வார்கள். மற்றும் வாசிப்பை நேசிப்போர்க்கு இது மிகபெரிய வாய்ப்பு தவறவிட்டு விடாதிர்கள்.
மேலும் விவரங்களுக்கு Bookchor.com சென்று பார்க்கவும்.