கழிவறைக்கு செல்போனுடன் செல்பவரா நீங்கள்..? அந்த இடத்தில் பைல்ஸ் வரும் ஜாக்கிரதை! ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்!

கழிவறைக்கு செல்போனுடன் செல்பவரா நீங்கள்..? அந்த இடத்தில் பைல்ஸ் வரும் ஜாக்கிரதை! ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்!

இதுதொடர்பாக, நொய்டாவில் உள்ள ஜேபி ஹாஸ்பிடலில் மூலநோய் சிகிச்சைப் பிரிவு  டாக்டராக பணிபுரியும் திபாங்கர் சங்கர் மித்ரா, ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், ”டாய்லெட்டில்
தேவையற்ற வகையில் பலர் ஸ்மார்ட்ஃபோனை பயன்படுத்தும் வழக்கம் அதிகரித்துள்ளது. இவ்வாறு
செய்யும்போது, மலம் கழிப்பதில் பாதிப்பு ஏற்பட்டு, அவர்களின் மலக்குடல் நரம்புகள், ஆசன வாய் உள்ளிட்டவற்றில்
அதிக அழுத்தம் ஏற்பட நேரிடுகிறது.

இது படிப்படியாக, மூல நோய்க்கட்டி ஏற்படவும், ஆசன வாய்
வெடிப்பு ஏற்படவும் வழிவகுக்கிறது. அதாவது, நீண்ட நேரம் ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்தியபடி
டாய்லெட் செல்வதால், நீண்ட நேரம் கழிவறையிலேயே அமர நேரிடுகிறது. இதனால் மேற்கண்ட பாதிப்புகள்
எளிதில் ஏற்படும் சூழல் உண்டாகிறது.

இதேபோல, யாரேனும் நீண்ட நேரம் டாய்லெட்டில்
செலவிடுகிறார் எனில் அவருக்கு மலச்சிக்கல் உள்ளது என அர்த்தம். நாள்பட்ட மலச்சிக்கல் படிப்படியாக
மூலநோயை ஏற்படுத்துவதில்தான் முடியும். எனவே, உடல்நலனில் ஒவ்வொருவரும்
அக்கறை செலுத்துவது நலம்,” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்