கூவாகம் திருவிழா! மிஸ் 2019 திருநங்கை அழகியானார் நபீஷா!

கூவாகம் திருவிழா! மிஸ் 2019 திருநங்கை அழகியானார் நபீஷா!

நேற்று திருநங்கைகளுக்கான மிஸ் கூவாகம் அழகிப் போட்டி நடைபெற்றது. முதல்கட்டமாக  திருநங்கைகளுக்கு நடனப் போட்டிகளும், தொடர்ந்து ‘பேஷன் ஷோ’ நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. 

இதில் பல திருநங்கைகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். சிறப்பான திறமையை வெளிப்படுத்தியவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இறுதியாக  மிஸ் கூவாகம் அழகிப் போட்டி நடைபெற்றது. இதில் 15 திருநங்கைகள் பங்கேற்றனர். 

எயிட்ஸ் விழிப்புணர்வு மற்றும் பொது அறிவுத்திறன் தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டது. இதில் அனைவரையும் கவரும் வகையில் செயல்பட்ட  தர்மபுரியை சேர்ந்த நபீஸா முதலிடம் பிடித்தார். அவர் மிஸ் கூவாகமாக பட்டம் சூட்டப்பட்டார்.

கோவையைச் சேர்ந்த மடோனா இரண்டாவது இடத்தையும், பவானி பகுதியை சேர்ந்த ருத்ரா மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

Related posts

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

இரும்பு போல உறுதி தரும் கேழ்வரகு !!