பரம்பரைத்தன்மை மற்றும் பிறவிக் குறைபாடுதான் இந்தப் பிரச்னைக்கு முக்கியக் காரணங்கள். * ஆண்களையே அதிகம் பாதிக்கிறது. பத்து ஆண்களில் ஒருவருக்கு நிறக்குருடு சிறிய அளவிலாவது இருக்கத்தான் செய்கிறது. பெண்களுக்கு மிகக் குறைவான அளவே பாதிப்பு இருக்கிறது.
பிறவியில் இல்லாதபோதும் முதுமை, நீரிழிவு, கண்ணில் அடிபடுதல், குளுக்கோமா போன்ற பாதிப்பு காரணமாகவும் நிறக்குருடு ஏற்படலாம். இந்தக் குறைபாடு இருப்பவர்களால் குறிப்பிட்ட ஒரு சில வேலைகளை செய்ய முடியாது.
இந்த நோய்க்கு மருந்து கிடையாது என்பதால் காலம் முழுவதும் குறைபாடு தொடரத்தான் செய்யும். ஆனால், இந்தக் குறைபாட்டுடன் வாழ்வதற்குப் பழகிக்கொள்ள முடியும்.