இரண்டு கோடி ரூபாய் கொடுத்தும் வாரிசு ஹீரோ படத்தில் இரண்டாவது முறையாக நடிக்க மறுத்த காஜல் அகர்வால் !! என்ன காரணம் தெரியுமா ??

இரண்டு கோடி ரூபாய் கொடுத்தும் வாரிசு ஹீரோ படத்தில் இரண்டாவது முறையாக நடிக்க மறுத்த காஜல் அகர்வால் !! என்ன காரணம் தெரியுமா ??

தெலுங்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்து வரும் “ஆச்சார்யா” படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமான த்ரிஷா. என்னிடம் சொன்ன கதையில் தனது கதாபாத்திரத்தில் நிறைய மாற்றங்களை செய்தார்கள் என காரணம் கூறி அட்வான்ஸ் தொகையை திருப்பி கொடுத்து விட்டு அந்தப்படத்தில் இருந்து அதிரடியாக விலகினார். அதை தொடர்ந்து சில நாட்களிலேயே ஆச்சார்யா படத்தின் கதாநாயகியாக காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்தநிலையில் அவர் உதயநிதி படத்தில் இருந்து வெளியேறி அந்தப்படத்தின் கால்ஷீட்டைத் தான் ஆச்சர்யாவுக்கு வழங்கியுள்ளார் என்கிற தகவல் கசிந்துள்ளது. உதயநிதியின் படத்தில் நடிக்க கோடிகளில் சம்பளம் பேசப்பட்டதால் ஒப்புக்கொண்டு அட்வான்ஸும் கூட வாங்கிவிட்டாராம் காஜல். ஆனால் சிரஞ்சீவி படத்தின் அழைப்பு வந்ததால், உடனே உதயநிதி படத்திற்கு வாங்கிய அட்வான்ஸ்-ஐ திருப்பி கொடுத்து விட்டு ஆச்சார்யா படத்திற்கு போய்விட்டாராம்.

 

அட்வான்ஸ் வாங்கியிருந்தாலும் உதயநிதி படத்திற்காக அவர் எந்தவிதமான ஒப்பந்தத்திலும் கையெழுத்திடவில்லை என்று கூறுகிறார்கள். இதனால், உதயநிதி படக்குழு எந்த வித சட்டபூர்வ நடவடிக்கையும் எடுக்க முடியாது என்கிறார்கள். ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்ப உதயநிதி நடித்த நண்பேன்டா படத்திலும் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமான காஜல், திடீரென விலகிவிட, அவருக்கு பதிலாக நயன்தாரா நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர், நடிகைகள் ஒரு படத்தில் ஒப்பந்தம் ஆவதும். அதன் பிறகு, பலதரப்பட்ட காரணங்களால் விலகுவதும் ஒன்றும் புதிதல்ல. என்றாலும், உதயநிதியின் இரண்டு படங்களில் தொடர்ந்து ஒப்பந்தமாகி, கடைசி நேரத்தில் விலகியுள்ளார் காஜல் அகர்வால்.

** என்னவா இருக்கும்…?

இந்நிலையில், ஆச்சார்யா திரைப்படம் வரும் 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Related posts

ஜென்டில்மேன் திரைப்படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்க இருந்தது இவர் தானாம்.. யார் அந்த நடிகர் தெரியுமா? இதோ..!!

லொஸ்லியா தந்தையின் உடல்.. நீண்ட நாட்களுக்கு பின் இலங்கைக்கு வந்தது.. தந்தையின் உடலை பார்த்து க தறி அழுத லொஸ்லியா.. பிறகு நடந்தது என்ன தெரியுமா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடிக்கப் போவது இனி இவரா? சித்ரா போல் வருமா? வெளியான தகவல்..!!