மிகவும் கடினமான தோலுக்குப் பின்னே உடல் நலனைக் காக்கும் ஆரோக்கிய மூலக்கூறுகள் ஒளிந்திருக்கின்றன என்பதை அறிந்துகொண்டால், அவசியம் வாங்கி பயன்படுத்துவார்கள்.
• அன்னாசி பழத்தில் வைட்டமின் சத்துக்கள் தேவைக்கும் அதிகமாக நிரம்பியிருப்பதால் உடலுக்குத் தேவையான பலம் தருகிறது. பருவகால நோய் தாக்குதலில் இருந்து காப்பாற்றுகிறது.
• இரும்புச்சத்து நிரம்பியிருப்பதால் ரத்தசோகையால் பாதிக்கப்படுபவர்களுக்கு அருமருந்தாக பயன்படுகிறது.
• உடலில் சேரும் தேவையற்ற சதையைக் குறைக்கும் தன்மை இருப்பதால் உடல் பருமன், தொப்பையால் அவதிப்படுபவர்களுக்கு அன்னாசி நல்ல மருந்தாகும்.
• அன்னாசி பழச்சாறு தொடர்ந்து குடித்துவருபவர்களுக்கு மேனி பளபளப்பும் நரம்பு சுறுசுறுப்பும் உண்டாகும்.
பொதுவாக அன்னாசி பழத்தை அனைத்து காலங்களிலும் வாங்கி ருசிக்கவும் பயன் பெறவும் முடியும் என்பதால் வாரம் ஒரு முறையாவது சாப்பிடுவது நல்லது.