இந்தியாவை பொறுத்தவரை, கிரிக்கெட்டுக்கு இருக்கும் முக்கியத்துவம் மற்ற எந்த விளையாட்டுக்கும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்… தேசிய விளையாட்டு ஹாக்கி என்று கூறினாலும், அதைப்பற்றி இங்குள்ள எத்தனை பேருக்கு தெரியும்? என்று கேட்டால் அது மிகக்குறைவு…. அதிலும், உலக கோப்பை கிரிக்கட்டை விட, இந்த ஐபிஎல்-லின் தாக்கம் மிக அதிகம்… மற்ற நாட்டு வீரர்களுக்கும் முன்னுரிமை கொடுத்து, அவர்களுக்கும் தங்கள் ஆதரவையும், அன்பையும் கொடுத்து விளையாட்டு துறையிலேயே ஒரு கலக்கல் கொண்டாட்டத்தை அறிமுகப்படுத்தியது இந்த ஐபிஎல்…
ஐபிஎல் ஆரம்பித்து விட்டால் போதும், சீரியல், சினிமா எல்லாம் தள்ளி போய் நின்று விடும்… சீரியல் பார்த்து அழுத பெண்களை விட… சீரியஸாக கிரிக்கெட்டை பார்த்து அழும் ஆண்கள் என்றே சொல்லாம்… இப்படியாக கடந்த மாதம் தொடங்கிய ஐபிஎல் வழக்கம் போல் அமர்க்களமாக தொடங்கியது…. அதிலும் கடந்த வருடம், சி.எஸ்.கே சரியாக விளையாடவில்லை என்ற குற்றச்சாட்டை முறியடிக்கும் வகையில், இந்த வருடம் அற்புதமாக களத்தில் இறங்கி தன் முத்திரையைப் பதித்தது சிஎஸ்கே டீம்… அதைத் தொடர்ந்து, டெல்லியும், அடுத்ததாக பெங்களூரும் இருந்த நிலையில், கொரோனா பரவலின் காரணமாக ஐபிஎல் இடைகால நிறுத்தம் செய்யப்பட்டது…
இந்த செய்தி, கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது… அதைத் தொடர்ந்து எப்போது மீண்டும் ஐபிஎல் ஆரம்பிக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்… இந்நிலையில் பிசிஜி தலைவர் மற்றும் முன்னால் கிரிக்கெட் வீரரான சவுரவ் கங்குலி டி20 உலக கோப்பைக்கு முன் ஜபிஎல் தொடரை நடத்தி முடிக்க வாய்ப்பிருக்கிறதா? என்பதை மற்ற நாட்டு கிரிக்கெட் வாரியத்துடன், கலந்தாலோசிக்கவுள்ளோம், ஏனெனில் பாதியில் இந்த ஐபிஎல் தொடரை நிறுத்தினால், சுமார் 2000 கோடி நஷ்டமாகும்.. இது வெறும் முதல் கட்ட கணிப்பு மட்டும் தான்… அதற்கு மேலும் நஷ்டமாக வாய்ப்பிருக்கிறது என்று கூறியுள்ளார்…
அதனால் கிரிக்கெட் ரசிகர்கள், கவலைக் கொள்ள வேண்டாம்… எப்போது வேண்டுமானாலும் மீண்டும் ஐபிஎல் தொடரை ஆரம்பிக்கலாம் எனத் தெரியவந்துள்ளது… மேலும் இதுபோன்ற சுவாரசியமான தகவலுக்கு, எங்கள் தளத்துடன், இணைந்திருங்கள்….