சொந்தக் காசில் சூனியம் வைத்துக்கொள்ள ஆசையா? மாஸ்டர் ஹெல்த் செக்கப் செய்யுங்க!

சொந்தக் காசில் சூனியம் வைத்துக்கொள்ள ஆசையா? மாஸ்டர் ஹெல்த் செக்கப் செய்யுங்க!

ஒருவர் ஆரோக்கியமாக இருக்கின்றாரா? இல்லையா? எப்படி தெரிந்து கொள்வது? “மாஸ்டர் செக்கப்” செய்துகொள்வதுதான், இன்று பரவலாக நம்பப்படும் ஒரு முறை! பரிசோதனை செய்வது என்பது “சொந்தக்காசில் சூனியம்” வைத்துக்கொள்வது போன்றது.

நோயில்லாமல் வாழ்க்கை நடத்திக்கொண்டிருப்பவரை, “நீ நோயாளிதான்” என நம்ப வைத்து மருந்து மாத்திரை விற்கும் நிறுவனங்களுக்கு நிரந்தர வாடிக்கையாளாராக்கும் “தந்திர வியாபார வலை” தான் பரிசோதனை செய்ய பரிந்துரைப்பது. அல்லது,”அப்படியிருக்கும், இப்படியிருக்கும்” என பயமுறுத்தி பரிசோதனை செய்ய தூண்டுவது.

நம்மில் அநேகர் இதில் மாட்டிக்கொண்டு, இல்லாத நோய்க்கு மருத்துவம் செய்து, உள்ளபடியே நோயை வரவழைத்துக் கொண்டவர்கள்தான். இதில் மோசமாக பாதிக்கப்படுபவர்கள் நன்கு படித்தவர்கள்(?), பணம் படைத்தவர்கள், புகழடைந்தவர்கள். எப்படி?

ஒவ்வொருவரின் உடலும் நாங்கள் சொல்வதுபோல்தான் இயங்கவேண்டும்.

சர்க்கரை நோய் ரீடிங் 80/140,

இரத்த அழுத்த நோய் ரீடிங் 80/120,

சிறுநீரக நோய் ரீடிங் 1.02,

கொழுப்பு அளவு,

உப்பு அளவு

பொதுவாக இப்படி தான் இருக்க வேண்டும் என்று, WHO பரிந்துரையின்படி சில அளவுகளை நிர்ணயித்திருக்கிறது நவீன ஆங்கில மருத்துவம். இதை நாமும் உண்மை என நம்பி, நோயாளிகளாக மாறிகொண்டிருக்கிறோம். இத்தகைய “ரீடிங்குகள்” நவீன விஞ்ஞானத்தின் “நன்கொடைகள்”.

நம் உடல் இயற்கை விதிகளின்படி இயங்குகிறது. ஒவ்வொருவரின் உடலியக்கமும் ஒவ்வொருமாதிரி இயங்குகிறது. உலகில் எந்த இருவரின் உடலியக்கமும் ஒன்றுபோல் இருக்காது. யாருக்கும் கைரேகை ஒன்று போலிருக்காது. உலகின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும், வெவ்வேறு தட்ப வெப்ப நிலை, வெவ்வேறு உணவு பழக்கம், வெவ்வேறு உணவு உண்ணும் முறை, வெவ்வேறு கலாச்சாரம், வெவ்வேறு ஜீன் கட்டமைப்பு இருக்கின்றன!

இது உண்மையானால் ஒவ்வொரு மனிதனின் உடலியக்கமும் தனித்தன்மையுடையதாகத்தானே இருக்கும். அப்படியானால் எந்த இருவரின் உடலியக்கமும் ஒன்றுபோல் இயங்காது. அப்படியானால், உலகில் பல மூலைகளிலிருக்கும் எல்லோருக்கும் ஒரே ரீடிங் இருக்கவேண்டும், என்று ஆங்கில மருத்துவ உலகம், அடம் பிடிப்பது எப்பேற்பட்ட முட்டாள் தனம். இதை சரியென்று ஏற்றுக்கொண்டு, அதற்குத்தக்கப்படி உடலியக்கத்தை மாற்றுவது எவ்வளவு பெரிய அறியாமை.

எனவே இந்தபரிந்துரைகளை கட்டவிழ்த்துவிடும் என்பது இந்த நூற்றாண்டின் மாபெரும் ஆங்கில மருத்துவத்தின் வணிக மோசடி. அப்படியானால், ஒரு மனிதன் ஆரோக்கியமாக இருப்பது, இல்லாதது, எப்படி தெரிந்துக் கொள்வது? வரும் முன் காப்பது எப்படி? இந்நிலை உங்களுக்கு இருக்கிறதா? என உறுதி செய்துகொள்ளுங்கள்.

1. தரமான பசி.

2. தரமான தாகம்.

3. தரமான தூக்கம்.

தரம் என்ன என்ற பதிலில் ஒவ்வொருவாருக்கும் ஒவ்வொரு புரிதல் இருக்கும். எனவே மேற்சொன்ன பசி, தாகம், தூக்கம் இவற்றில் திருப்தியாக இருந்தால், “நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள்” என உறுதி செய்து கொள்ளலாம்.

பொதுவாக, 35 வயதுக்குமேற்பட்டோர் ஆண்டுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்துகொள்வது நல்லது. குறிப்பாக உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, ரத்தப் புற்றுநோய், சர்க்கரைநோய் போன்ற ஏதாவது மரபு வழி நோய்கள் இருந்தால் அந்தக் குடும்பத்தை சேர்ந்தவர்கள் 35 வயதுக்கு முன்பாக இந்தப் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.

புகைபிடிப்பவர்கள், மது அருந்துபவர்கள், உடல் பருமனாக உள்ளவர்கள், போதிய உடலுழைப்பு இல்லாமல் உட்கார்ந்த நிலையிலேயே பணியாற்றுபவர்கள், ஸ்டீராய்டு மருந்துகளைத் தொடர்ந்து சாப்பிடுபவர்கள் போன்றோர் வருடத்துக்கு ஒரு முறை கட்டாயம் இதைச் செய்துகொள்ள வேண்டும்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்