இதுவெல்லாம் உண்மையா என்றால் இல்லை என்பதே பதில். மது என்பது போதை தரக்கூடியது. அதில் உடல் நலனுக்கான எந்த அம்சமும் இல்லை. அதனால் ஒரு துளி மதுவாக இருப்பினும், ஒரு கோப்பை மதுவாக இருப்பினும் அதன் தீய விளைவுகள் ஒன்றுதான்.
ஒருசிலருக்கு மது குடிப்பதால் உடல் நலனில் சட்டென சிக்கல் ஏற்படாது, ஒருசிலருக்கு பாதிப்பு ஏற்படும். இதற்குக் காரணம் அவர்களது மரபணு காரணங்கள்தான். அதனால் மது என்பது தீமைதான் என்பதில் தெளிவாக வேண்டும்.
அதேபோன்று ஒயின் குடிப்பது நல்லது என்ற எண்ணமும் பொய்தான். ஒயின் வகை மதுக்கள் திராட்சைப் பழங்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படுபவை. எனவே, திராட்சையில் இருக்கும் ஆன்ட்டி ஆக்சிடென்டுகள் உடலுக்கு நன்மை செய்யும் என்ற கோணத்தில் மது ஆரோக்கியமானது என்ற நம்பிக்கை பரவி இருக்கிறது.
நாட்பட்ட காரணத்தாலே ஒயின் போதை தருகிறது. திராட்சைப் பழத்தின் நன்மை வேண்டும் என்றால் நேரடியாக சாப்பிடலாமே தவிர,ஒயின் குடிக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை.