புளியை சமையலுக்கு சேர்ப்பது நல்லதா அல்லது கெட்டதா??

புளியை சமையலுக்கு சேர்ப்பது நல்லதா அல்லது கெட்டதா??

கால்சியம், வைட்டமின் பி, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, மாவுச்சத்து, அல்புமின் போன்றவை புளியில் அடங்கியுள்ளன. புளிய மரத்தின் இலை, பழம், பட்டை எல்லாமே மருத்துவத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.

• அஜீரணம் அல்லது கபம் காரணமாக எச்சில் சுரப்பு தடைபட்டு நாவறட்சி ஏற்படுவதை நீக்கும் தன்மை புளிக்கு உண்டு.

• உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தும் சக்தி புளிக்கு உள்ளது. புளியில் இருக்கும் டார்டாரிக் அமிலம் நோய் எதிர்ப்பு சக்தியாகவும் பயன்படுகிறது.

• பொட்டாசியம் மற்றும் இரும்புத்தாது காரணமாக ரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படுகிறது. மேலும் ரத்த சிவப்பணு உற்பத்திக்கும் புளி துணை புரிகிறது.

• புளி ஊறவைத்த தண்ணீரால் வாய் கொப்பளிப்பதன் மூலம் தொண்டை வறட்சியை போக்க முடியும்.

புளிப்பு சுவை தருவதுடன், உணவு கெட்டுப்போகாமல் தடுக்கவும் செய்கிறது புளி. நீரிழிவு, ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் புளியை குறைத்துக்கொள்வது நல்லது.

Related posts

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

இரும்பு போல உறுதி தரும் கேழ்வரகு !!