மிகவும் குறைந்த அளவில் உணவில் சேர்க்கும்போது உடல் ஆரோக்கியத்திற்கு பயன்படுகிறது. இனிப்பு மற்றும் துவர்ப்பு சுவை கொண்ட கசகசா வெப்பத்தன்மை உடையது ஆகும்.
·
கசகசாவை அரைத்து பாலில் கலந்து குடித்துவர உடலில் பலம் உண்டாகும், மெலிந்த உடல் தேறும்.
·
கசகசாவை வாயில் மென்று துப்பினால் வாய்ப்புண், தொண்டைக் கமறலில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
·
கசகசா சேர்க்கப்பட்ட உணவினால் ஜீரண சக்தி உண்டாகும். வயிற்றுப் புண், வயிறு குறைபாடுகள் நீங்கும்.
·
உடலுக்கு சுறுசுறுப்பும், நரம்புகளுக்கு பலமும், மூளைக்கு விறுவிறுப்பும் தரும் தன்மை கசகசாவிற்கு உண்டு.
அழகுப் பொருளாக பயன்படுத்தப்படும் கசகசாவில் எவ்விதமான போதைத்தன்மையும் இல்லை என்றாலும் குறைந்த அளவு எடுத்துக்கொள்வதே போதுமானது.