21 வயதில் கூகுள் நிறுவனத்தில் ரூ. 1.2 கோடி சம்பளம்! சுந்தர் பிச்சையையே மலைக்க வைத்த இந்தியன்!

21 வயதில் கூகுள் நிறுவனத்தில் ரூ. 1.2 கோடி சம்பளம்! சுந்தர் பிச்சையையே மலைக்க வைத்த இந்தியன்!

மும்பையை பூர்விகமாக கொண்ட  அப்துலா கானுக்கு ஐ.ஐ.டி.யில் சேர வேண்டும் என்பது தான் வாழ்வின் லட்சியமாக இருந்தது. அதற்காக கடும் முயற்சியில் ஈடுபட்ட போதும் நுழைவுத் தேர்வில் வெற்றி பெறாத்தால அவரது எண்ணம் ஈடேறவில்லை. இதனால்  ஏதோ ஒரு பொறியியல் கல்லூரியில் படிப்பைத் தொடர்ந்தார். 

இந்நிலையில் புரோகிராமிங் சேலஞ்ச் ஒன்றின் மூலம்  அப்துல்லாகானின் புரொஃபைல் கூகுள் நிறுவனத்தில் பார்வைக்கு வந்தது. இதையடுத்து அவருக்கு கூகுள் நிறுவனம் நேர்காணலுக்கு அழைப்பு விடுத்தது. அதன் பேரில் கூகுள் நிறுவனத்தின் ஆன்லைன் தேர்வுகளை எதிர்கொண்டு வென்ற அப்துல்லா கான், இறுதித் தேர்வுக்காக  லண்டன் சென்றார்.

இறுதித் தேர்விலும் வென்ற அப்துல்லாகானுக்கு லண்டன் அலுவலகத்தில் செப்டம்பர் மாதத்தில் சேர பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. அவரது ஆண்டு ஊதியம் என்ன தெரியுமா? ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய். ஐ.ஐ.டி. தேர்வில் தோற்ற பின்பும் விடாமுயற்சி அப்துல்லா கானை வாழ்வில் உயர்த்தியுள்ளது.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்