முட்டைகோஸை சமைத்து சாப்பிடுவதைவிட பச்சையாக சாப்பிடுவதே மிகவும் சிறப்பானது. எந்த அளவுக்கு வேக வைக்கப்படுகிறதோ, அந்த அளவுக்கு முட்டைகோஸ் சத்துக்களை இழந்துவிடும்.
·
முட்டைகோஸில் இருக்கும் வைட்டமின் சி, பி மற்றும் சல்பர், அயோடின் போன்றவை வயிறு, குடல் உறுப்புகளை சுத்தப்படுத்தி ஜீரணத்தை சுலபமாக்குகிறது.
·
முட்டைகோஸில் உள்ள டார்டரானிக் அமிலம் கொழுப்பை குறைப்பதால், உடல் எடையைக் குறைப்பவர்களுக்கு ஏற்ற உணவாக இருக்கிறது.
·
முட்டைக்கோஸில் ‘வைட்டமின் கே‘ அதிகமாக இருப்பதால் எலும்புகளுக்கு உறுதியும் நரம்புகளுக்கு புத்துணர்ச்சியும் கிடைக்கிறது.
·
தினமும் முட்டைகோஸை உணவில் சேர்த்துக்கொள்பவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
இப்போது வெள்ளை, பச்சை, சிவப்பு போன்ற நிறங்களில் முட்டைகோஸ் கிடைக்கிறது. அனைத்திலும் ஒரே அளவிலான சத்துக்களே நிரம்பியுள்ளது.